டெல்லி: ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் (விவசாயிகள் போராட்டம்) இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் தடையை மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகல் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசா, விவசாயிகளைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்திருந்தனர். இந்த தடுப்புகளைத் தாண்டி செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி தருகிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஷம்பு எல்லையையே போராட்ட களமாக்கி விவசாயிகள் கடந்த ஓராண்டாக முகாமிட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டி இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் படுகாயமடைந்தனர். இதனால் இந்தப் போராட்டம் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
#WATCH | Police use tear gas to disperse farmers who began their 'Dilli Chalo' march today, but stopped at the Shambhu border
"We will first identify them (farmers) and then we can allow them to go ahead. We have a list of the names of 101 farmers, and they are not those people… pic.twitter.com/KGpmxDjGD4
அதேநேரத்தில் மத்திய அரசு தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.
இதனையடுத்து இன்று மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். ஆனால் போலீசார், விவசாயிகளை முன்னேற விடாமல் தடுப்புகள் அமைத்து தடுத்திருந்தனர். இந்த தடுப்புகளை தாணி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல முற்பட்ட போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை சரமாரியாக வீசி விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லைப் பகுதியே போர்க்களமாக காட்சி தருகிறது. ஹரியானாவின் ஷ்ம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage