சென்னை: சனாதனம் குறித்த தனது பேச்சை திரித்து வாயை வாடகைக்கு விட்டு சிலர் பிழைப்பு நடத்துவதாகவும் அவர்கள் பிழைப்பில் தாம் மண் அள்ளிப் போட விரும்பவில்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்'கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த 'சனாதன ஒழிப்பு' மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, 'இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்' என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார் யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான் தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், 'பிழைத்துப் போகட்டும்' என்று விட்டுவிட்டேன்.
நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.
உதயநிதி பேச்சை 'ட்விஸ்ட்’ செய்த பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா.. 'புக்’ செய்த திருச்சி போலீசார்
'சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா' என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார்.
'என்ன வாய் மட்டும் வேலை செய்யுது' என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage