சென்னை: தட்கலில் டிக்கெட் செய்யும்போது, சில அடிப்படை விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.. மற்ற டிக்கெட்டுகளை போலவே தட்கல் டிக்கெட்டையும் ரத்து செய்யலாம். ஆனால், சில சூழ்நிலைகளில் மட்டும்தான் பணம் திருப்பி தரப்படும். அதைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டுமானால், எல்லாருக்குமே டிக்கெட்டுகள் கிடைத்துவிடுவதில்லை.. இதில், பயணிகளின் விவரங்களை நிரப்புவதற்கே நேரம் எகிறிவிடுகிறது.. விவரங்களை நிரப்பி முடிப்பதற்குள், நமக்கு பின்னால் வருபவர்கள் டிக்கெட் எடுத்துவிடுவார்கள். அப்படியே அவசரமாக விவரங்களை நிரப்பிவிட்டாலும்கூட, பணம் செலுத்துவதில் நேரமாகிவிடும்.
எனவே, தட்கலில் புக்கிங் செய்வதாக இருந்தால், செல்போனிலேயே செய்துவிடலாம். பயணத்தேதிக்கு ஒரு நாள் முன்பு தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.. AC பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், AC அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் இதன் முன்பதிவு ஆரம்பமாகிறது. இந்த ஒரு மணி நேரத்தில் புக்கிங் செய்யலாம்.
ஸ்லீப்பர் வகுப்பு: தட்கல் டிக்கெட் கட்டணம்: பயணத்தின் வகுப்பிற்கு ஏற்ப தட்கல் டிக்கெட் கட்டணம் இருக்கும். ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.100 முதல் ரூ.200 வசூலிக்கப்படும். ஏசி நாற்காலி கார் வசதிக்கு ரூ.125 முதல் ரூ.225 வரையிலும், ஏசி 3 அடுக்கு பிரிவுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், ஏசி 2 அடுக்கு பிரிவுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரையிலும் வசூலிக்கப்படும். எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு , கட்டணம் ரூ.400 முதல் ரூ.500 வரை இருக்கும்.
ஒருவேளை, தட்கலில் கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனால், நாம் செலுத்திய கட்டணம் திருப்பி தருவார்களா? மாட்டார்களா? பிடித்தம் செய்து கொள்வார்களா? என்றெல்லாம் சந்தேகம் எழும். இந்த விவரத்தை தான் இப்போது பார்க்க போகிறோம்.
தட்கல் டிக்கெட் கன்பார்ம் ஆன டிக்கெட் என்றால், அதனை ரத்து செய்யும் போது, பணத்தைத் திரும்பப் பெற முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பணத்தைத் திரும்பப் பெறலாம்
தட்கல் டிக்கெட்: குறிப்பாக, IRCTC வெப்சைட்டில், ஒருவர் தட்கலில் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் அவரால் பயணம் மேற்கொள்ள முடியாவிட்டால், டிக்கெட்டை ரத்து செய்தால் அவருக்கு, டிக்கெட்டுக்கான பணம் திருப்பித்தர மாட்டாது.
ஆனால், ரயில் புறப்படும் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்கு பயணி TDR என்று சொல்லப்படும் டிக்கெட் டெபாசிட் ரசீதை எடுக்க வேண்டும்.
குறைந்த வகுப்பு: அதேபோல, தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகும், முன்பதிவு செய்த முன்பதிவு வகுப்பில் பயணிகளுக்கு இருக்கைகளை ரயில்வேநிர்வாகம் ஒதுக்க முடியாமல் போனால், டிக்கெட்டை ரத்து செய்தால் பணத்தை திரும்பப் பெறலாம். அதேபோல, பயணிக்கு அவர் முன்பதிவு செய்த வகுப்பை விட குறைந்த வகுப்பில் இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அவர் அந்த வகுப்பில் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால் ரத்து செய்யலாம்.
அதேபோல, ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படும் என்பதையும் பார்க்கலாம். ரயிலில் 2ம் வகுப்பு இருக்கை கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.60 பிடித்தம் செய்யப்படும்.
முன்பதிவு டிக்கெட்: அதேபோல 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.120 பிடித்தம் செய்யப்படும்... 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளின் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 200 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி பெட்டி மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணிக்கும் பயணிகள் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 240 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage