புதிய கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. விலை எவ்வளவு தெரியுமா?

post-img

 

Courtesy: instagram
 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பார்வையாளர்களை ஈர்க்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருந்து வருகிறது. வருடம் ஒரு முறை 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண விஜய் டிவி பார்வையாளர்கள் முதல் பிற தொலைக்காட்சி ரசிகர்கள் வரை அனைவரும் அந்த 100 நாட்கள் மட்டும் விஜய் டிவியை பார்க்கும் அளவிற்கு பிக் பாஸ் மிகவும் பிரபலம்.
Courtesy: instagram
 
 
அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றவர் தனலட்சுமி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது ஒரு திரை பிரபலமாக இருந்து வருகிறார். 
Courtesy: instagram
 
 
சின்னத்திரை பிரபலங்கள், மாடல், நடிகை, பாடகர் என பல விதமான திறமை கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான தனலட்சுமி இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
Courtesy: instagram
 
 
 
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனலட்சுமிக்கு நடிப்பின் மீது அவ்வளவு ஆர்வமாம். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக இஷ்டம் கொண்ட தனலட்சுமி தனது நடிப்பைனை வெளிப்படுத்த டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை பயன்படுத்திக்கொண்டார். 
Courtesy: instagram
 
 
 
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஞ்சனா, அருந்ததி மற்றும் திரைப்படங்களில் பிரபலமாகும் கதாபாத்திரங்களை போல் வேடமிட்டு தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டகிராமில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமா நபர்கள் தனலட்சுமியை பின்தொடர்கின்றனர். 
Courtesy: instagram
 
 
 
இந்த நிலையில் தனலட்சுமி தற்போது புதிதாக கார் ஒன்றை வங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் எனவும் கூறுகின்றனர். தற்போது தனலட்சுமி புதியாக கார் வாங்கியதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Courtesy: instagram
 
 

Related Post