இன்று முதல் உலக வங்கியின் தலைவர்.. NRI-களின் மகுடம்..!

post-img

இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா, உலக வங்கியின் தலைவராக இன்று முதல் பொறுப்பேற்க உள்ளார். சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டிலும் தலைவர் பதவியை வகித்த முதல் வேற்று நிற நபர் அஜய் பங்கா.

இங்கு நிறம் குறித்து பேச முக்கிய அவசியமும் உள்ளது, இதுவரையில் உலக வங்கி மற்றும் IMF அமைப்புகளில் அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர்களை தாண்டி வேறு நாட்டவரை தலைவர் பதவியில் நியமித்தது கிடையாது. இது வரலாற்று சாதனை விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா, உலக வங்கியின் தலைவராக இன்று முதல் பொறுப்பேற்க உள்ளார். சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டிலும் தலைவர் பதவியை வகித்த முதல் வேற்று நிற நபர் அஜய் பங்கா.   இங்கு நிறம் குறித்து பேச முக்கிய அவசியமும் உள்ளது, இதுவரையில் உலக வங்கி மற்றும் IMF அமைப்புகளில் அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர்களை தாண்டி வேறு நாட்டவரை தலைவர் பதவியில் நியமித்தது கிடையாது. இது வரலாற்று சாதனை விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

                             Ajay Banga: இன்று முதல் உலக வங்கியின் தலைவர்.. NRI-களின் மகுடம்..!

அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு உலக வங்கியின் தலைவரா அஜய் பங்கா இருக்கப்போகிறார், இவருடைய நியமனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரையின் பெயரில் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட மே 3 அன்று அறிவிக்கப்பட்டது.

உலக வங்கியின் முன்னாள் தலைவர் டேவிட் மல்பாஸ் பதவி விலகுவதாக அறிவித்த பின்பு, சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில் உலகி வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து சந்தைகளிலும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இந்த நிலையில் தான் அமெரிக்க அரசு ஜோ பைடன் பரிந்துரை செய்தது.

பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். உலக வங்கியின் தலைவர் பதவியில் அமரும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை அஜய் பங்கா பெற்றுள்ளார் அஜய் பங்கா.

உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான் அஜய் பங்கா. சொல்லப்போனால் பார்சூன் 500 நிறுவனத்தின் பல நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓ-வாக இருந்தாலும், அனைத்திற்கும் முன்னோடி அஜய் பங்கா தான். 

இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-விற்குத் தற்போது 63 வயதாகிறது. மாஸ்டர்கார்டு நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய நிலையில் தற்போது உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி முதலீட்டு நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.


Related Post