Gold Rate Today: சென்னையில் 2 நாளாக விலை ஏறாத தங்கம்! நாளைக்கு பெரிய ஷாக்கா இருக்குமோ?

post-img

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.8) எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது தெரியுமா? நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் டிசம்பர் 6ஆம் தேதிக்கான விலையே விற்கப்படுகிறது.
சென்னையில் டிசம்பர் 8-ஆம் தேதி மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு சவரன் ரூ 56,920-க்கும் ஒரு கிராம் ரூ 7115 -க்கும் விற்பனையாகிறது.

Image: AI created
சென்னையில் டிசம்பர் 7ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கூடுமோ குறையுமோ என எதிர்பார்த்திருந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்தது. இதனால் ஒரு சவரன் ரூ 56,920-க்கும் ஒரு கிராம் ரூ 7115 -க்கும் விற்பனையானது. அதே வேளையில் வெள்ளியின் விலையில் ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 100-க்கும் ஒரு கிலோ ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 6 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,920 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,115-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் டிசம்பர் 5 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,120 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 4-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் டிசம்பர் 3ஆம் தேதி விற்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 3 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,040 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது.

சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்புர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.

Related Post