வாஷிங்டன்: இன்று இரவு நைட் வானத்தைப் பாருங்கள்.. நிச்சயம் உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது.. இன்று நீங்கள் பார்க்கும் நிலவை உங்கள் வாழ்நாளிலேயே மறக்க மாட்டீர்கள்.
விண்வெளியும் பிரபஞ்சமும் பல அதிசயங்களைக் கொண்டதாகும். வானில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நம்மை வியக்க வைப்பதாகவே அமையும்.. சில அரிய நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும்.
இதை மிஸ் செய்தால் அதைப் பார்க்கப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும். அப்படி ஒரு அதிசயமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு இன்றிரவு நடக்கப் போகிறது. இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.. பிறகு பல ஆண்டு காத்திருக்க வேண்டும்.
சூப்பர் மூன்: இன்று அப்படி என்ன தான் நடக்கப் போகிறது எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.. பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலவு பல லட்சம் கிமீ தொலைவில் பூமியைச் சுற்றி வருகிறது.. . நிலா நம்மை நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதால் சில நேரங்களில் நிலா பெரியதாகத் தெரியும். இந்த நிகழ்வைத் தான் ஆய்வாளர்கள் சூப்பர் மூன் என்று அழைக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்தது. அன்றைய தினம் நிலவு நமது பூமியில் இருந்து 357,530 கிமீ தொலைவில் இருந்தது.
இன்றைய தினம் மீண்டும் அதுபோல ஒரு நிகழ்வு ஏற்பட உள்ளது. ஆனால் கூடுதல் ஸ்பெஷல் உடன்.. இன்றைய தினம் நிலவு பூமியிலிருந்து 357,244 கி.மீ மட்டும் தொலைவில் இருக்கப் போகிறது. இன்றைய தினம் சாதாரண சூப்பர் மூன் நிகழ்வாக இருக்காமல், ப்ளூ மூன் நிகழ்வாகவும் இருக்கப் போகிறது. அதென்ன ப்ளூ மூன் என்று கேட்கிறீர்களா.. வாங்க இது குறித்தும் நாம் பார்க்கலாம்.
ப்ளூ மூன்: பூமியில் இருந்து நிலவு எந்தளவுக்கு அருகில் வருகிறது என்பதையே "சூப்பர் மூன்" என்பது குறிக்கிறது. பூமியில் இருந்து சூரியன் மிகவும் அருகில் வரும் நிகழ்வை "சூப்பர் மூன்" என்கிறோம்.. அப்படிதான் இந்தாண்டு இறுதியில் அருகில் வந்தது. அதேநேரம் நீல நிலவு எனப்படும் இந்த ப்ளூ மூன் நிலா எத்தனை முறை பூமியைச் சுற்றி வருகிறது என்பதையே குறிக்கும்.. பூமியை நிலவு சுற்றி வரச் சராசரியாக 29.5 நாட்கள் ஆகும். இதன் காரணமாகவே மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே எப்போதும் பவுர்ணமி ஏற்படும்.
இருப்பினும், சில நேரங்களில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறை பவுர்ணமி ஏற்படும்.. இதைத் தான் நீல நிலவு என்று குறிப்பிடுகிறோம். இதற்கும் நிலவின் நிறத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. ஒரே மாதத்தில் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமியைத் தான் நீல நிலவு என குறிப்பிடுகிறோம்.. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்த நீல நிலவு நடக்கும். இதை நாம் ப்ளூ மூன் என்கிறோம்..
மிஸ் பண்ணாதீங்க: சூப்பர் மூனும் இந்த ப்ளூ மூனும் இணைந்து இன்று ஒரே நாளில் தோன்றுவதே இதை சிறப்பானதாக மாற்றுகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் 2009இல் இந்த நீல சூப்பர் மூன் ஏற்பட்டது. இப்போது சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ப்ளூ மூன் ஏற்படுகிறது. இந்த சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை மிஸ் செய்தால் 2032 வரை நாம் காத்திருக்க வேண்டி இருக்கும்.