அல்லு பற்றி கவலைப்படுறீங்களே.. கூட்டத்தில் சிக்கி கோமாவிலுள்ள குழந்தை பற்றி ஏன் பேசவில்லை- ரேவந்த்

post-img
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனை ஏன் கைது செய்தீர்கள். மக்கள் பெரும் கோபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கேள்வி கேட்ட இந்தியா டூடே தொகுப்பாளருக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கொடுத்த பதிலடி தற்போது இணையதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தான நடிப்பில் வெளியான ‛புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை கடந்து திரையங்குகளில் ஓடி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஹைதரபாத்தில் உள்ள வீட்டில் நுழைந்துஅவரை போலீசார் கைது செய்தனர். அதாவது படம் ரிலீசாவதற்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 4ம் தேதி புஷ்பா 2 சிறப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற 35 வயது பெண் இறந்தார். அவரது மகன் மயங்கினார். இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதன்பிறகு தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு உடனடியாக கிடைக்காததால் அல்லு அர்ஜுன் கைதான வெள்ளிக்கிழமை அன்று இரவில் சிறையில் இருந்தார். அதன்பிறகு நேற்று காலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே தான் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது புஷ்பா 2 படம் மிக பெரிய ஹிட் அடித்த நிலையில் அதன்வெற்றி விழா நடந்தது. அப்போது புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கிய தெலுங்கானா அரசுக்கு நன்றி என்று அல்லு அர்ஜுன் கூறினார். இதில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை கூறுவதில் தடுமாறினார். இதனால் தான் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை பழிவாங்கியதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுவும் விவாதமாகி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா டூடே சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர் ராகுல், நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து கேள்வி கேட்டார். இதுதொடர்பாக, ‛‛இப்போது மிகப்பெரிய தெலங்கு ஸ்டாரை கைது செய்துள்ளீர்கள். மக்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அதை பற்றியே பேசி கொண்டிருக்கிறார்கள். என்ன இது அரசியல் சூப்பர் ஸ்டார், நமது பிலிம் சூப்பர் ஸ்டாரை கைது செய்விட்டார்கள் என்று பேசுகிறார்களே?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரேவந்த் ரெட்டி, ‛‛இல்லை ராகுல். நீங்கள் தவறாக சொல்கிறீர்கள். யாரும் அப்படி பேசிக்கொள்ளவில்லை’’ என்றார். அதற்கு ராகுல், ‛‛போராட்டங்கள் நடக்கிறது சார்’’ என்றார். இதை கேட்ட ரேவந்த் ரெட்டி, ‛‛போராட்டங்கள் எல்லா இடங்களிலும் எதற்காவது நடந்து கொண்டிருக்கும். ஓரிடத்தில் 10, 20 பேர் இருந்தால் அதற்கு பெயர் போராட்டம் அல்ல. மேலும் அவர்கள் அனுமதி வாங்காமல் போராட்டம் செய்தால் அவர்களும் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் மிகவும் ஆபத்தான மனநிலையில் இருக்கிறீர்கள். என்ன ராகுல், ஒருவரை ஜெயிலுக்கு கொண்டு சென்றதற்கு எத்தனை பேச்சு பேசுகிறீர்கள். ஆனால் ஒரு பெண் தன் உரியை இழந்து இருக்கிறார். அவரை பற்றி நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்த பெண்ணின் குடும்பம் எப்படி இருக்கிறது? அந்த பெண்ணின் மகன் 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்கும்போது அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? அவன் வாழ்க்கை எப்படி செல்லும்? இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. சினிமாவில் நடிப்பது அவரது வேலை. பைசா குறைவாக வரப்போகிறது அல்லது அதிகமாக வரப்போகிறது என்றால் உங்களுக்கும், எனக்கும் என்ன கொடுக்கல், வாங்கல் இருக்கிறது. சொல்லுங்க பார்ப்போம். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். ஏதாவது ஒரு நிலத்தை வாங்குவார். லே - அவுட் போடவார். விற்பார். சம்பாதிப்பார். இந்த நாட்டிற்காக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நின்று சண்டையிட்டு வெற்றி பெற்றாரா? படம் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார்’’ என்று கூறினார்.

Related Post