திருவண்ணாமலையில் திருமணமான 4 நாளில்.. மாப்பிள்ளைக்கு புதுப்பெண் தந்த வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு

post-img
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் தாலியை கழற்றி வீசிவிட்டு சென்னை வாலிபருடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை சென்னை வண்டலூரை சேர்ந்த வாலிபர் ஏற்கனவே பெண் பார்த்தவர் ஆவார். பெற்றோரால் வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்டவர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தார்கள். இதன்படி சென்னை வண்டலூரை சேர்ந்த வாலிபர் குடும்பத்துடன் வந்து திருமணத்துக்காக பெண் பார்த்து சென்றார். அவர்களிடம் பெண் வீட்டார் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு இருவீட்டாரும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு வழங்கினர். அதன்பின்னர் சீரும் சிறப்புமாக கடந்த 12-ந் தேதி சேத்துப்பட்டு அருகே படவேடு கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் அந்த ஜோடிக்கு திருமணமும் நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர. இந்த நிலையில் ஏற்கனவே பெண் கேட்டு வந்த சென்னை வண்டலூரை சேர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் திருமணமான அந்த புதுப்பெண் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் புதுப்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். உடனே புதுப்பெண் தனது கணவர் கட்டிய தாலியை கழற்றி வீசிவிட்டு சென்னை வாலிபருடன் காரில் சென்று விட்டார். இதுகுறித்து பெண்ணின் தாயார் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 நாளில் தாலியை கழற்றிவீசிவிட்டு சென்னை வாலிபருடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் திருவண்ணாமலை சேத்துபட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் பிடிக்கவில்லை என்றால் முன்பே கூறியிருக்கலாம்.. அல்லது திருமணம் நடப்பதற்கு முன்பே தெளிவாக கூறி தடுத்து நிறுத்தியிருக்கலாம். திருமணம் ஆனபின்னர் வாழ பிடிக்கவில்லை என்று ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணமான பெண் 4 நாளில் சென்றதை அந்த பகுதி மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

Related Post