சென்னை: அண்ணா பல்கலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி கடும் விமர்சனங்கள் வைத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பாக நடத்தப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டம் நடக்கும் முன் அங்கே கூடி இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு முன்கூட்டியே கூடி இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன், திமுக நிர்வாகி என குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதற்கு எதிராக தற்போது பாஜக, அதிமுக போராடி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி கடும் விமர்சனங்கள் வைத்துள்ளார். இன்று ஆர்ப்பாட்டத்திற்கு முன் பேசிய அவர்.. எவ்வளவு பெரிய பல்கலைக்கழகம் இது. எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க பல்கலைக்கழகம் இது. இங்கே இப்படி ஒரு கொடுமை நடப்பதை எப்படி ஏற்க முடியும்.
என்ன அக்கிரமம் இது? அந்த பொண்ணுக்கு என்ன நேர்ந்தது தெரியுமா? அதை கேட்கவே மனசு பதறுகிறது. டாப் ரேங்க் எடுத்த ஒருவர்தான் இங்கே வர முடியும். அந்த பெண் எப்படி நிம்மதியாக வாழ்வார். அந்த வலி வாழ்நாள் மூலம் வராதா? இதற்கு எல்லாம் யார் பதில் ?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வளவு போலீஸ் இப்போது வருகிறதே இவர்கள் அப்போது எங்கே சென்றார்கள். இவர்களால் அதிமுக போராட்டத்தை ஒடுக்க முடியும். ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா? என்ன அக்கிரமம் இது? மக்கள் இதை எல்லாம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும், என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி கடும் விமர்சனங்கள் வைத்துள்ளார்.
கைது: முன்னதாக அண்ணா பல்கலை பலாத்காரத்தில் கைது செய்யப்பட்ட பிரியாணிக்கடைக்காரர் ஞானசேகரன் குறித்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகார் சம்மந்தமாக. கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 தேதி இரவு சுமார் 08.00 மணியாவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அண்ணா பல்கலைக்கழக பலாத்காரம்: அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசார செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ISவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் εδίστησεις நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.