Today Gold Rate: சென்னையில் தங்கம் விலை மேலும் குறைந்தது.. சவரன் எவ்வளவுன்னு பாருங்க!

post-img
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 7070க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ520 குறைந்து 56,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் வெள்ளியின் விலையும் இன்று ஒரு ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை குறைந்தது. அதற்கு முன்பு இரண்டு நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை ஆகி வந்தது. நேற்று முன் தினம் 17 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 57,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கு விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூபாய் 120 குறைந்தது. இதன்படி நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 57,080-க்கு விற்பனையானது. இதேபோன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையானது, ரூ 15 குறைந்து கிராம் ரூ 7,135 -க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் 7135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கமானது 7,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூபாய் 65 குறைந்துள்ளது. இதேபோன்று சவரனுக்கு இன்று ஒரே நாளில் 520 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ.56,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று வெள்ளியின் விலையானது ஒரு கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூபாய் ஒன்று குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Post