சென்னை: மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கிதந்து, பலாத்காரம் செய்து வந்ததாக மகளிர் போலீசில் 2 மாணவர்கள் வாக்குமூலம் தந்துள்ளார்கள். சென்னையை இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் உலுக்கி எடுத்து வருகிறது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசில் புகாரில் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில், "நான் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய மகள் மகளிர் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
ஆண் நண்பர்கள்: என்னுடைய மனைவி, உடல் நலக்குறைவால் கடந்த 2022ல் இறந்துவிட்டார்.. இந்நிலையில், என்னுடைய மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கேட்டதற்கு, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம், பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக சொன்னார். உடனே நான் இதுகுறித்து அயனாவரம் மகளிர் போலீசில் புகார் அளித்தேன்.
அதற்கு மகளிர் போலீசார், சம்பவம் நடந்த இடம் சிந்தாதிரிப்பேட்டை எல்லையில் வருவதால், அங்கு சென்று புகார் தருமாறு சொன்னார்கள். அதனால்தான் இங்கு புகார் அளித்துள்ளேன். எனவே என்னுடைய மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் அனைவர் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தாராம் கணேஷ்.
விசாரணை: அந்த புகாரின்படி போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்கள். தன்னுடைய தோழி மூலம், அண் நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக இருந்து வந்ததாக மாணவி சொன்னர். அதுமட்டுமல்ல, ஆண் நண்பர்களுடன் ஒன்றாக இருந்தது தவறு என்றே தனக்கு தெரியாது என்றும் வெகுளித்தனமாக சொன்னார்.
இதைக்கேட்டு மகளிர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்... தனக்கு என்ன நடந்தது என்று கூட சரியாக தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அப்பெண்ணின் மன வளர்ச்சி இருப்பதை அறிந்து கவலையும், வியப்பும் அடைந்தனர்.
செல்போன் ஆய்வு: பிறகு, பிறகு மாணவியின் செல்போன் விபரங்களை போலீசார் ஆராய்ந்து, அதில், மாணவிக்கு அடிக்க போன் செய்த நபர்கள் யார் யார் என்று லிஸ்ட் எடுத்தனர். அப்போதுதான், திருவள்ளூர் மாவட்டம் அத்தி மஞ்சரிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்ற 20 வயது இளைஞர் சிக்கினார்.. இவர் நந்தனம் கல்லூரியில் படித்து வருபவராம்.
அதேபோல, சுரேஷின் நண்பர் பள்ளி மாணவர் ஒருவர், கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி, சீனு ஆகியோரும் மாணவிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஆண் நண்பர்களுடன் பழகுவதற்கு மாணவிக்கு உடந்தையாக இருந்ததே, சக தோழி என்பதும் விசாரணையில் உறுதியானது.
அதாவது, மனவளர்ச்சி குன்றிய மாணவியை, மொத்தம் 8 பள்ளி, மாணவர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.. இவர்கள் மீதும், சக தோழி மீதும் என மொத்தம் 9 பேர் மீது சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றவாளிகள்: இவர்களில் முக்கிய குற்றவாளியான திருவள்ளூர் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான பள்ளி சிறுவன் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணையும் மேட்றகொண்டனர். அப்போது, சுரேஷூம், அந்த பள்ளி மாணவனும் போலீசில் அளித்த வாக்குமூலமானது, போலீசாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, மாணவியின் சகதோழியுடன், இன்ஸ்டாவில் அறிமுகமாகியிருக்கிறார் சுரேஷ்.. அதனால், தோழியை பார்க்க, அடிக்கடி அவரது காலேஜூக்கு வருவாராம். அப்போதுதான், கடந்த வருடம் அக்டோபர் மாதம், மனவளர்ச்சி குன்றிய மாணவியை சுரேஷ் நேரில் பார்த்துள்ளார்.. உடனே இன்ஸ்டாகிராம் தோழியிடம், அப்பெண்ணை தனக்கு அறிமுகம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.
செல்போன் நம்பர்: அதன்படியே மனவளர்ச்சி குன்றிய மாணவியை சுரேஷூக்கு, சகதோழி அறிமுகம் செய்து வைத்து, அவரது செல்போன் எண்ணையும் வாங்கி தந்துள்ளார். இதற்கு பிறகு, சுரேஷ், மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு, வாட்ஸ் அப் மெசேஜ்களை அனுப்பி, காதலிப்பதாக சொல்லி, மணிக்கணக்கிலும் போனில் பேசி வந்துள்ளார்.. காலேஜூக்கு கட் அடிக்க சொல்லி, அந்த பெண்ணை பைக்கில் பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார் சுரேஷ்.
மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் காஸ்ட்லியான சாக்லட்டுகளை வாங்கி தந்துள்ளார் சுரேஷ்.. அடிக்கடி தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி, அவருக்கு பாலியல் உணர்வுகளை தூண்டியதுடன், வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியிலுள்ள லாட்ஜ்களில் ரூம் எடுத்து, மாணவியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
மாணவி பரிதாபம்: ஆனால், இதெல்லாம் தவறு என்றுகூட தெரியாமல், சுரேஷூடன் மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். 100 ரூபாய் சாக்லேட் வாங்கி தந்தால், மாணவி எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுகிறார் என்பதை தெரிந்து கொண்ட சுரேஷ், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மாணவியை பேச வைத்து அவர்களுடனும் நெருக்கமாக இருக்க ஏற்பாடுகளை செய்து தந்துள்ளார்.. இப்படி ஒரு வருடத்துக்கும் மேலாக, மனவளர்ச்சி குன்றிய மாணவியை, ஆண் நண்பர்கள் அத்தனை பேரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சீரழித்து வந்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் எல்லாம் சக தோழிக்கு தெரிந்தும்கூட, ஆண் நண்பர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் சிக்கியிருப்பதால், அவர்களையும் உரிய ஆதாரங்களின் படி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்..!!!
Weather Data Source: Wettervorhersage 21 tage