மும்பை: உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில், மனைவி ஒருவர் ரூ.500 கோடி கேட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நிரந்தர ஜீவனாம்சமாக ரூ.12 கோடி வழங்க கணவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவாகரத்து வழக்கில் மனைவி சார்பாக கணவர் மீதும், மாமனார் மீதும் வழக்கு பதியப்பட்டது. 85 வயதான மாமனாருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு கணவரை அமெரிக்காவுக்குச் செல்லும் போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். கணவர் மீது 498A- குடும்ப வன்முறை வழக்கு பதியப்பட்டது.
வழக்கின் பின்னணி: இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த விவாகரத்து வழக்கு குறித்து இங்கே பார்க்கலாம்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில் ஆன்லைன் மேட்ரிமோனி போர்ட்டல் மூலம் இவர்கள் இருவரும் சந்தித்து உள்ளனர். கணவர் அமெரிக்காவில் பிஸ்னஸ் செய்து வந்துள்ளார். இவர்கள் ஆன்லைனில் காதலித்து கொரோனா காலத்திலேயே திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்களாக அமெரிக்கா, மும்பை என்று மாறி மாறி வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இந்த சண்டை உச்சம் அடைந்த நிலையில் இருவரும் பிரிந்து உள்ளனர். இதையடுத்து இருவரும் மும்பையிலேயே பிரிந்து வாழ்ந்துள்ளனர். அவ்வப்போது கணவர் பிஸ்னஸ் வேலைகளுக்காக அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
இதையடுத்து மனைவி சார்பாக விவாகரத்து வழக்கு பதியப்பட்டது. இதில் முதலில் மனைவி கணவர் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் கணவர் அதற்கு தயாராக இல்லை. இதையடுத்து மனைவி 500 கோடி ரூபாய் கேட்டு வழக்கை திருத்தி உள்ளார்.
மேலும் இந்த விவாகரத்து வழக்கில் மனைவி சார்பாக கணவர் மீதும், மாமனார் மீதும் வழக்கு பதியப்பட்டது. 85 வயதான மாமனாருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மனைவி தன்னிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவதாக கணவர் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்.. கணவர் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார் என்பதற்காக அவரிடம் உள்ள சொத்துக்களை எல்லாம் கேட்க முடியாது. கணவரின் தற்காலிக பொருளாதாரத்தை வைத்து பணம் கேட்க முடியாது. நீங்கள் உங்களின் வாழ்க்கை பராமரிப்பிற்கு மட்டுமே ஜீவனாம்சம் கேட்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் 500 கோடி ரூபாய் கேட்டு உள்ளீர்கள். அதை அனுமதிக்க முடியாது.
இதனால் நிரந்தர ஜீவனாம்சமாக ரூ.12 கோடி வழங்க கணவருக்கு உத்தரவிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு கணவரை அமெரிக்காவுக்குச் செல்லும் போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். கணவர் மீது 498A- குடும்ப வன்முறை வழக்கு பதியப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அவர் செய்து வந்த பிஸ்னஸில் முடக்கம் ஏற்பட்டு போர்ட் மெம்பர்கள் மூலம் அவர் அவரின் சொந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
மனைவியிடம் ஏற்கனவே 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருந்தும் கூட 12 கோடி ரூபாய் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கு விதி: சமீபத்தில் மனைவிகள் கேட்கும் ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 அம்ச பார்முலாவை வகுத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்தது.
ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 காரணிகளை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:
இரண்டு தரப்பின் பொருளாதார நிலை, சமூக மற்றும் நிதி நிலைமை
மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன.
இரண்டு தரப்பின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை.
விண்ணப்பதாரின் வருமானம் அல்லது சொத்துக்கள்.
திருமண வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.
குடும்பப் பொறுப்புகளுக்காக ஆகும் செலவு
வேலை செய்யாத மனைவிக்கு ஆகும் தினசரி செலவுகள்.
கணவரின் நிதித் திறன், அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக் வைத்து ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.