"இந்தியா" vs பாஜக: 'முதல் ரவுண்டு' ரிசல்ட் இன்று! 6 மாநிலங்களில் 7 சட்டசபை

post-img

டெல்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.


லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணி தேசிய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது.


இதே நேரத்தில் 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுகளுக்கு செப்டம்பர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தி துக்புரி, ஜார்க்கண்ட் தும்ரி, திரிபுரா போக்ஸ்நாநகர், தான்பூர், உ.பி. கோஷி, உத்தரகாண்ட் பாகேஸ்வர், கேரளாவின் புதுப்பள்ளி ஆகிய 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


மேற்கு வங்கம் துப்குரி: 2021 சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற தொகுதி. அத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பிஷு படாரே காலமான நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மும்முனைப் போட்டியை இத்தொகுதி எதிர்கொண்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் என மும்முனைப் போட்டியில் மகுடம் யாருக்கு என்பது சற்று நேரத்தில் தெரியும்.


திரிபுரா: இம்மாநிலத்தில் தன்பூர், போக்ஸாநகர் ஆகிய இரு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இரு தொகுதிகளிலும் மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் சிபிஎம் இடையே இருமுனைப் போட்டி உள்ளது. காங்கிரஸ் மற்றும் பலம் வாய்ந்த திப்ரா மோத்தா கட்சி இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.


உத்தரகாண்ட்: பாகேஸ்வர் தொகுதியில் பாஜகவின் எம்.எல்.ஏ.வாக இருந்தவ சந்தன் ராம் தாஸ். இவரது மறைவால் இடைத்தேர்தலை பாகேஸ்வர் தொகுதி எதிர்கொண்டிருக்கிறது. பாஜகவை காங்கிரஸ் கட்சி நேரடியாக சந்திக்கிறது. சந்தன் ராம்தாஸ் மனைவி பார்வதி தாஸ்தான் பாஜகவின் வேட்பாளராக இங்கு போட்டியிட்டுள்ளார்.


ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர் ஜகநாத் மஹதோ உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து நடைபெற்ற இத்தேர்தலில் ஜகநாத் மஹதோவின் மனைவி பீபி தேவி "இந்தியா" கூட்டணி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஏஜேஎஸ்யூவின் யசோதா தேவி, பாஜக ஆதரவுடன் போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தலில் பாஜக, ஏஜேஎஸ்யூ தனித்தனியே போட்டியிட்டன.


கேரளா: முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் (ஒமன் சான்டி) சொந்த தொகுதி. இத்தொகுதியை தமது கோட்டை போல் கட்டி காத்தவர் உம்மண் சாடி. மொத்தம் 53 ஆண்டுகள் இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து சரித்திரம் படைத்தவர். உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் ஊமன் சாண்டி, காங்கிரஸ் சார்பில் களம் கண்டார். அவரை எதிர்த்து சிபிஎம் -ன் ஜேக்சி தாமஸ், பாஜகவின் லிகின்லால் களம் கண்டனர்.


உத்தரப்பிரதேசம்: "இந்தியா" கூட்டணியும் பாஜகவும் நேருக்கு நேர் மோதுகிற முதல் இடைத்தேர்தல் இது. இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாதி கட்சியின் தாராசிங் சவுஹான் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பாஜகவுக்கு தப்பி ஓடினார். இதனால் கோஷி தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டது. பாஜகவுக்கு ஓடிப் போன தாரா சிங் சவுஹான் இப்போது அக்கட்சியின் வேட்பாளர். சமாஜ்வாதி கட்சி அவரை எதிர்த்து சுதாகர்சிங் என்பவரை வேட்பாளரை நிறுத்த "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக தேர்தலில் போட்டியிடாமல் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கின்றன. இதனால் கோஷி தொகுதி இடைத்தேர்தல் முடிவு மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

 

 

Related Post