நீங்க ஒரு ஃபுட்டியா? குட்நியூஸ்! உள்ளூர் முதல் வெளிநாட்டு உணவுகள்! ஒரே இடத்தில்!

post-img

சென்னை: உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் இன்று முதல் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாட்டு உணவு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலில் சிங்கார சென்னையில் சிறுதானியம், உணவுத் திருவிழா நடைபெறுகிறது.


இதற்காக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாரம்பரிய சிறுதானிய உணவுகளுக்காக 30 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அசைவம் மற்றும் சைவ உணவுகள் கிடைக்கும். தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவுகள், தாய்லாந்து, மலேசியா உணவு வகைகளும் கிடைக்கும்.


இந்த திருவிழா இந்த 3 நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ 10 சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


இங்கு விற்கப்படும் உணவுகளின் விலை வழக்கமாக அந்தந்த ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் விலையை விட மலிவாக இருக்கும் என தெரிகிறது. அது போல் மீன்வளத் துறை சார்பில் மீன் உணவுகளும் மலிவாக விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

Related Post