இரு துருவங்கள் திடீர் மீட்டிங்.. டி.டி.வி.தினகரன் கிட்ட போய்.. சட்டென பேசிய ராமதாஸ்.. பெரிய ட்விஸ்ட்

post-img
சென்னை: டாக்டர் ராமதாசை இன்று டி.டி.வி.தினகரன் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொன்னாலும், அரசியல் ரீதியாக சந்தித்தார் என்றும்.. இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் முக்கியமான சில விஷயங்கள் பேசப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் -பாஜக அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்படி பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது தோல்வியை சந்தித்த அதிமுக, கூட்டணியில் இருந்து வெளியே வந்து படுதோல்வி அடைந்து விட்டது. இதை மாற்ற மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும். இல்லையென்றால் அழிந்துவிடும், என்று குறிப்பிட்டு இருந்தார். திடீர் சந்திப்பு: டாக்டர் ராமதாசை இன்று டி.டி.வி.தினகரன் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொன்னாலும், அரசியல் ரீதியாக சந்தித்தார் என்றும், பாஜகவின் செயல் திட்டத்தை தினகரன் எடுத்துச் சொன்னதாகவும் பாமக தரப்பில் சொல்லப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தல்.. அந்த தேர்தலில் அமைக்கப்பட உள்ள கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாம். இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் முக்கியமான சில விஷயங்கள் பேசப்பட்டது என்றும் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் இந்த சந்திப்பு நடந்தது. மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவது பற்றி எடப்பாடி பேசியதாக கூறப்படுகிறது. எடப்பாடி திட்டம் என்ன?: சமீபத்தில்தான் 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பின் முக்கியமான சில திட்டமிடல் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ரெடியாகிவிட்டார் என்று செய்திகள் வருகின்றன. அதாவது 2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே கூட்டணி வைப்பதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்ய தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி பெரும்பாலும் மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக, பாமக , தேமுதிக, புதிய தமிழகம் உடன் மீண்டும் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது என்டிஏ கூட்டணி மீண்டும் உருவாக்கப்படலாம். ஆனால் இதற்கு அண்ணாமலை முட்டுக்கட்டை போட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அண்ணாமலை திரும்பி வந்த பின் பெரியதாக கருத்துக்கள் எதையும் தெரிவிக்காதது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை மனதில் வைத்தே 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் டாக்டர் ராமதாஸ் டி.டி.வி.தினகரன் சந்திப்பு கவனம் பெற்று இருக்கலாம் என்கிறார்கள்.

Related Post