ஒடிசா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது;

post-img

காயமடைந்த தமிழக பயணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் நேரில் சென்று நலம் விசாரித்தனர். ...
அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது...

காயமடைந்த தமிழக பயணிகளுக்கு தமிழக அரசு சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடு செய்துள்ளது. வருகை தந்த 137 பேரில் 8 பேர் முழங்காலில் காயமுற்றுள்ளனர். பெரும்பாலான பயணிகளுக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளது.தமிழகர்கள் யாரும் உயிரிழக்கவில்லை....

காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி, மற்றும் ஓம்ந்தூரர் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 207 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட மருத்தவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் ரத்து

இதற்கிடையில் நேற்று, 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; 38 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன;.20 விரைவு ரயில்களின் சேவையில், ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் ரத்துக்கான கட்டணம், கவுன்டர்களில் கிடைக்கும். இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், அவர்களின் வங்கி கணக்கில் கட்டண தொகை திருப்பி செலுத்தப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...


Related Post