சென்னை: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சமீப நாட்களாக அதிக அளவில் டிவி விவாதங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு வங்கி எவ்வளவு என்று இன்னும் உறுதியாகவில்லை.. அந்த கட்சி கூட்டணி வைக்குமா? தேர்தல் சமயத்தில் என்ன செய்யும் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இப்போதைக்கு விசிக விவகாரம் காரணமாக விஜய் லைம்லைட்டில் இருக்கிறார்.
விஜய் சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டது சர்ச்சையானது. ஆதவ் அர்ஜுனா அதில் தமிழக திமுக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து பேசினார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் காரணமாக தற்போது ஆதவ் அர்ஜுனா எங்கே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் விசிக விவகாரம் காரணமாக விஜய் லைம்லைட்டில் இருக்கிறார். விஜயின் கட்சி அடிக்கடி விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் தனது கட்சி நிர்வாகிகள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம்.
அப்செட்: அதன்படி சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்வாகி ஒருவர்.. விஜயை எதிர்கொள்ள அதிமுக, திமுக இரண்டிற்கும் பயம். அதாவது இவர்கள் 2026ல் கூட்டணி வைப்பார்கள். அதாவது விஜயை எதிர்க்க அதிமுக - திமுக கூட்டணி வைக்கும் என்று கூறினார்.
சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இன்னொரு நிர்வாகி ஒருவர்... திமுக தனி தொகுதிகளை விசிகவிற்கு வழங்கும். பொது தொகுதியில் விசிகவை திமுக நிற்கவிட்டதே இல்லை என்று கூறி இருந்தார். அதாவது வரலாறு தெரியாமல்.. விஜய் கட்சி நிர்வாகி பேசி இருந்தார்.
அது மட்டுமின்றி விவாத நிகழ்ச்சிகளுக்கு வரும் மற்ற கட்சியினர் பொதுவாக அரசியல் ரீதியாக நிறைய படித்திருப்பார்கள். அரசியல் வரலாறுகள் தெரிந்து இருக்கும். தமிழக அளவில் கட்சி தொடர்பான வரலாறுகள் தெரிந்து இருக்கும்.
ஆனால் விஜய் கட்சியினர் இதற்கு புதிது. இத்தனை காலம் அதில் பலர் ரசிக சண்டை போட்டு வந்தனர். ஆனால் இவர்கள் இப்போது திடீரென அரசியல் பேச தொடங்கி உள்ளனர். ஆனால் அரசியல் சண்டை என்பது சினிமா சண்டை போன்றது அல்ல. இதில் வரலாறு, உண்மையான நம்பர்ஸ், புள்ளி விவரம் முக்கியம். ஆனால் விஜய் ரசிகர்கள் இன்னும் அந்த அளவிற்கு பக்குவப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
இதன் காரணமாகவே விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திணறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம். ஏதாவது உளறுகிறார்களே என்று கோபத்தில் உள்ளாராம். இதனால் கட்சி சார்பாக புதிய செய்தி தொடர்பாளர்களை.. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதிய நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். அனுபவம் பெற்றவர்களை களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.