சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்து உள்ளாராம். இதில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம்.
ஈரோடு கிழக்கில் மீண்டும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இங்கே மீண்டும் இடைத்தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
அங்கே எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலை காலமானார். உடல் உபாதைகள், வயோதிகம் காரணமாக கடந்த சில வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிக மோசமானது. அவரின் உடல்நிலை கடந்த 2 நாட்களாக தீவிரமாக மோசம் அடைய.. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
அவரின் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் முதல்வர் ஸ்டாலின் பின்வரும் விஷயங்களை ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
ஆலோசனை செய்யப்பட்ட விஷயங்கள்?:
1. 151 A சட்ட விதி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு சட்டசபை தொகுதி காலியாகிறது என்றால் 6 மாதத்தில் அங்கே தேர்தல் நடக்க வேண்டும். அதுவே சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க 1 வருடம் மட்டுமே இருக்கிறது என்றால் அங்கே இடைத்தேர்தல் தேவை இல்லை.
2. அந்த வகையில் ஈரோடு கிழக்கில் நேற்று சட்டசபை காலியானது. கணக்குப்படி பொதுத்தேர்தல் நடக்க இன்னும் 1 வருடம் 6 மாதங்கள் உள்ளன. இதனால் அங்கே 151 ஏ சட்டப்படி அங்கே இடைத்தேர்தல் நடக்க வேண்டும்.
3. இங்கே திமுகவை கொண்டு வரலாமா என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறார்.
4. அதாவது கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு இது ஒரு பூஸ்ட் கொடுக்கும். அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜி திரும்பிட்டார்.
5. தேர்தலுக்கு அவர் தயாராகும் விதமாக.. ஒரு பூஸ்ட் தரும் விதமாக கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வைத்து தேர்தல் பணிகளை செய்யலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம்.
6. ஆனால் கடைசியில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடட்டும். நம்முடைய கூட்டணியில் காங்கிரஸ்தான் இங்கே போட்டியிட்டது.
7. அதை திருப்பி எடுக்க வேண்டாம். அவர்களே போட்டியிடலாம்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில்,
காங்கிரஸ் சார்பாக திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளை பெற்றார்
தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜா 58,396 வாக்குகளை பெற்றார்
நாம் தமிழர் கட்சியின் கோமதி எஸ் 11,629 வாக்குகளை பெற்றார்
இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவு காரணமாக நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் 110,156 வாக்குகளை பெற்றார்
அதிமுக சார்பாக கே எஸ் தென்னரசு 43,923 வாக்குகளை பெற்றார்
நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளை பெற்றார்
இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் இங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.