Zomato, Swiggy-ஐ ஓட ஓட விரட்டும் ONDC.. ஆகா, ஓகோ-ன்னு பாராட்டும் மக்கள்..!

post-img

டிஜிட்டல் வர்த்தகம் தான் எதிர்காலம் என மாற்றிவிட்ட நிலையில் மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது. இத்தளத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியும்.

இந்த வகையில் சமீப காலமாக சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது ONDC தளத்தில் இணைந்து பல நிறுவனங்கள் முதல் கட்டமாக உணவு டெலிவரி சேவையை அளிக்கிறது. இந்த சேவையில் முக்கியமாக விஷயம் என்னவென்றால் ஸ்விக்கி, சோமேட்டோ தளத்தை காட்டிலும் குறைவான விலையில் உணவுகளை பெற முடியும்.                                                   Does ONDC offer food cheaper than Zomato, Swiggy? Here's what we know -  BusinessToday

 

ONDC தளத்தில் இணைந்துள்ள McDonald's, Taco Bell, Behrouz Biryani, Wow Momo, Pizza Hut மற்றும் Cafe Coffee Day ஆகியவை தற்போது பெங்களூரில் புட் டெவரி சேவை அளிக்கிறது. இதைவிட முக்கியமாக ஸ்விக்கி சோமேட்டோ தளத்தை ஒப்பிடுகையில் சுமார் 30 -80 சதவீதம் குறைவான விலையில் ONDC தளத்தில் உணவை பெற முடியும் என்பது தான் முக்கிய விஷயம். தங்கம் விலை கண்மூடித்தனமாக உயர்ந்தால் இதுதான் நடக்கும்.. தங்கத்தை வெறுக்கும் மக்கள்..!! ONDC தளத்தில் தப்போது டெலிவரி சார்ஜ் வசூலிக்கப்படுவது இல்லை, இதேபோல் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனம் வசூலிக்கும் ரெஸ்டாரென்ட் கமிஷன் தொகையை ஒப்பிடுகையில் 50 சதவீத தொகையை மட்டும் ONDC தளம் வசூலிக்கிறது. இவை இரண்டும் உணவு விலையை பெரிய அளவில் குறைப்பதால் மக்கள் குறைவான விலைக்கு உணவை பெற முடிகிறது.

இந்தியா மிகவும் போட்டி மிகுந்த சந்தை என்பதால் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களின் விலை ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களும் பெரும் வர்த்தக பாதிப்பை உருவாக்கும். ONDC தளத்தின் அறிமுகம் Zomato, Swiggy-க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மேலும் ONDC தளத்தின் அறிமுகம் மத்திய அரசு டிஜிட்டல் வர்த்தக துறையில் செய்த மிகப்பெரிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. 

Related Post