திருச்சி புறப்பட்ட விமானத்தில் கோளாறு! நாடு வானில் வட்டமடித்து மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

post-img
சென்னை: சென்னையிலிருந்து திருச்சி நோக்கி புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து விமானம் பத்திரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இண்டிகோ விமானம் சுமார் 68 பயணிகளுடன் திருச்சி நோக்கி புறப்பட்டது. பண்டிகை நேரம் என்பதால் விமான கட்டணம் முன்னெப்பொதும் இல்லாத அளவை விட அதிகரிக்கப்பட்டிருந்தது. கட்டணத்தை மட்டும் உயர்த்தி கேட்டு வாங்கும் விமான நிறுவனங்கள் ஏன்? விமானங்களை சரிபார்ப்பதில்லை என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Post