தேர்வு கிடையாது.. நேர்க்காணல் மட்டுமே.. சிவகங்கை ஆவினில் சூப்பர் வேலை.. மாதம் ரூ.43,000 சம்பளம்

post-img

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.43 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக பால்வளத்துறையின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் மாவட்ட வாரியாக ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்ட ஆவினில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட் (கால்நடை ஆலோசகர்) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாதம் ரூ.55,000 சம்பளம்.. என்ஜினீயரிங் முடித்தவரா நீங்கள்? அசத்தலான வேலைக்கு அழைக்கும் என்டிபிசிஎல் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை வெட்னரி சயின்ஸ் படிப்பை (B.V.Sc.) முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டரில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதோடு ஓட்டுனர் உரிமம் பெற்று டூவீலர் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Transport செலவுக்காக ரூ.8 ஆயிரம், Incentives ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதன்மூலம் மாதசம்பளமாக ரூ.43 ஆயிரம் வரை கிடைக்கும்.

கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தலான வேலை.. அழைக்கும் பிஇசிஐஎல் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் என்பது பிப்ரவரி மாதம் 7 ம் தேதி காலை 11 மணிக்கு Aavin Dairy, O Siruvayal Road, Kalnivasal, Karaikudi, Sivagangai District 630 002 என்ற முகவரிக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும். நேர்க்காணலுக்கு செல்லும்போது பயோடேட்டா, ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும்.

எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் மட்டுமே உள்ள நிலையில் இது ஒரு தற்காலிகமாக பணியாகும். தேர்வாகும் நபர்கள் 30.06.2024ம் தேதி வரை வேலையில் அமர்த்தப்படுவார்கள். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 04565 255702 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

Related Post