விக்ரம் - பிரக்யான் அனுப்பிய நிலவின் போட்டோ.. நல்லா உத்து பாருங்க..

post-img

நேற்று நிலவில் களமிறங்கிய சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், ரோவர் இரண்டும் உடனுக்குடன் புகைப்படங்களை அனுப்பி இருந்தன. இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் முக்கியமான விஷயம் ஒன்றை கவனித்தனர். அது என்ன?

நேற்று காலை வரை சீனா, ரஷ்யா, அமெரிக்கா என்று இருந்த லிஸ்டில் நேற்று மாலை இந்தியாவும் இணைந்தது. அந்த லிஸ்ட்.. நிலவில் களமிறங்கிய உலக நாடுகளின் லிஸ்ட், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நிலவின் தென் துருவத்தில் களமிறங்கிய ஒரே ஒரு நாடு இந்தியா மட்டுமே.

அங்கே இந்தியாவின் தேசிய கொடி, இஸ்ரோவின் கொடியை பிரக்யான் ரோவர் பதித்தபடி இங்கும், அங்கும் நகர்ந்து சென்று உள்ளது. இதன் மூலம் நிலவில் இந்தியாவின் கால்தடம்.. அதிலும் தென் துருவத்தில் இந்தியாவின் கால்தடம் அழுத்தம் திருத்தமாக பதிந்து உள்ளது.

எப்படி இறங்கியது: நேற்று சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மாலை 5.40 மணிக்கு நிலவில் இறங்க தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக பிரேக் போட்டு போட்டு நிலவில் இறங்கியது. முதலில் இரண்டு திரஸ்டர்கள் உதவியுடன் பிரேக் போட்டு போட்டு நிலவும் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து 7.64 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது.

அதன்பின் சில நிமிடம் கழித்து பின்னர் மீண்டும் இறங்கி 6 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. அதன்பின் மேலும் பிரேக் போட்டபடி ஆட்டோமெட்டிக் முறையில் இறங்கி 800 மீட்டர் வரை சென்றது. அதன்பின் கேமரா மற்றும் சென்சார்கள் உதவியுடன் முதலில் ஒரு இடத்தை இறங்குவதற்கு தேர்வு செய்து அந்த இடம் சரியில்லை என்றதும் அதை கைவிட்டுவிட்டு பின்னர் இரண்டாவதாக ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே இறங்குவதற்காக கீழே இறங்கியது,

10 மீட்டர் உயரம் வரை ஆட்டோமேட்டிக் லேண்டிங் முறையில் இறங்கிய விக்ரம் லேண்டர் அதன்பின் பொத்தென்று நிலவில் இறங்கி வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கியது. அதன்பின் 4 மணி நேரம் கழித்து சுமார் 10 மணிக்கு பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது.

அங்கே இருந்த புழுதி எல்லாம் அடங்கிய பின் பிரக்யான் ரோவர் நிலவில் கால் வைத்தது. 6 சக்கரங்கள் கொண்ட ரோவர் விக்ரமின் வயிற்றுப்பகுதியில் இருந்த பேனல் வழியாக கீழே இறங்கி சரிந்து வந்து நிலவில் சென்றது.

புகைப்படங்கள்: இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது போட்டோ எடுத்தபடி அதை பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருந்தது. அதன் தரைப்பகுதி எப்படி இருக்கிறது என்பதை அனுப்பிக்கொண்டே இருந்தது. அதன்பின் இன்னொரு பக்கம் பிரக்யான் ரோவரும் இறங்கிய உடனே முதல் போட்டோவை எடுத்து அனுப்பியது.

இந்த போட்டோவை பார்த்ததும் பலருக்குக் தோன்றிய விஷயம் அதில் இருக்கும் குழிகள்தான். நிலவின் தரையில் இருக்கும் பெரிய பெரிய குழிகள் தெளிவாக தெரிந்தன. ஆனாலும் விக்ரம் லேண்டர் முடிந்த அளவு சமதளமான இடத்தில் இறங்கி உள்ளது அதாவது விக்ரம் லேண்டர் குழிகளை தவிர்த்துவிட்டு நேராக நிற்க வாய்ப்பு இருக்கும் பகுதியில் ஸ்மார்ட்டாக யோசித்து இறங்கி உள்ளது புகைப்படம் மூலம் உறுதியாகி உள்ளது.


Related Post