நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 12,591ஆக உயர்வு.. ஒரே நாளில் 20 சதவீதம் அதிகரிப்பு

post-img

இந்தியாவில் சமீப வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி கோவிட்-19 பரவல் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 12,591 பேருக்கு புதிகாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே. நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே, கோவிட் பாதிப்பால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,286ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று பரவல் தீவிரத்தை குறிக்கும் தினசரி பாசிட்டிவிட்ட ரேட் 5.45 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதன்மூலம் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,230 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தீவிரமாக உள்ளது. டெல்லியில் புதிதாக 1,757 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

 

 

அங்கு பாசிட்டிவிட்ட ரேட் 28.63 சதவீதமாக உள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 1,100 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 6,102 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில், 910 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது. திரிபுரா மாநிலத்திற்கு வருகை தரும் புதிய நபர்கள் அனைவரும் கட்டாயமான அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Post