சென்னை: உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.. அந்தவகையில், மூலிகைகளும் உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.
முதலாவதாக, திரிபலா சூரணத்தை தினமும் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தி வந்தால், உடல் எடை குறைவதை கண்கூடாக காணலாம் என்கிறார்கள்.. அதாவது 5 கிராம் மட்டுமே இந்த பொடிய சாப்பிட வேண்டும். சிலர் இரவில் இந்த பொடியை சாப்பிடுவார்கள்.. சிலர் வெறும் வயிற்றில், ஒரு ஸ்பூன் எடுத்து, வெதுவெது நீரில் கலந்து குடிப்பார்கள்.
கடுக்காய்: எந்த நேரத்தில் இதை சாப்பிட்டாலும், இந்த பொடியின் பயன்கள் குறைய போவதில்லை. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என 3 வகையான காய்களையும் சமஅளவு சேர்த்து அரைத்தால், அதுதான் திரிபலா சூரணமாகும்.
கடுக்காய் 1 பங்கு, நெல்லிக்காய் 4 பங்கு, தான்றிக்காய் 2 பங்கு எடுத்து, நிழலில் உலர்த்தி, வீட்டிலேயே பொடி செய்து கொள்ளலாம் அல்லது நாட்டு மருந்து கடையிலும் இந்த திரிபலா சூரணம் கிடைக்கிறது. டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று இந்த பொடியை பயன்படுத்துவது நல்லது. அதேசமயம், இந்த திரிபலா சூரணம் சாப்பிட்டால் உண்டாகும் வேறு நன்மைகள் என்ன தெரியுமா?
குக்குலு: உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது.. எந்தவிதமான தொற்றுகளும் நம்மை அண்டவிடாமல் செய்கிறது.. புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடுகிறது.. உடலுக்கு தேவையான எதிர்ப்புசக்தியை தருகிறது. செரிமான பிரச்சனைகளை சீர் செய்கிறது.. குடல் பாதுகாப்பை தருகிறது.. உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. இவையெல்லாம் நடந்தாலே, உடல் எடை குறைய துவங்கிவிடும்.
அடுத்ததாக, குக்குலு மருந்தை பயன்படுத்தலாம். இது வடமாநிலத்தில் மிகவும் பிரபலமானது.. குக்குலு என்ற மரத்திலிருந்து, பிசின் போல ஒன்று வெளிவரும். சுமார் 8 வருடமானால்தான், இந்த பிசின், மரத்தில் வெளிப்படும்.. அதனால்தான், ஆயுர்வேதத்தில், இந்த பிசினுக்கான கிராக்கி நிறையவே உண்டு.
கீல்வாதம்: கீல்வாதத்திற்கு சிகிச்சைக்கு இந்த குக்குலு மருந்தாக பயன்படுகிறது என்றாலும், உடல் எடை குறைப்பிற்கும் உபயோகப்படுத்துவார்கள்.. உடலிலுள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது இந்த குக்குலு..
கல்லீரலில் கொழுப்பு இருந்தாலும், அது கரைந்து வெளியேறும்.. உடல் எடையை வெகுவாக குறைக்கும் என்றாலும், கர்ப்பிணிகளும், இளம்தாய்மார்களும், சர்க்கரை நோயாளிகளும், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும், இந்த குக்குலவை டாக்டர்களின் அனுமதியில்லாமல் தொடவே கூடாது.. உடல் எடை குறைக்க நினைப்போரும், டாக்டர்களின் அனுமதியை பெற்று சாப்பிட்டால், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.
ஊளி மீன்.. நுரையீரல் தொற்றை விரட்டியடிக்கும் ஊளி மீன்கள்.. உடல் எடை அசால்ட்டா குறையுமாம் பாருங்க
எடை இழப்பு: அடுத்ததாக, அஸ்வகந்தாவையும் உடல் எடை இழப்புக்காக தாராளமாக பயன்படுத்தலாம்.. இந்த மூலிகையில், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலிப்பு எதிர்ப்பு பண்புகள் நிரம்பி உள்ளன.. மன அழுத்தத்தை குறைக்கும் இந்த அஸ்வந்தா வேறு என்னென்ன நன்மைகளை தருகிறது தெரியுமா?
எடை இழப்பிற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த அஸ்வகந்தாவில் நிறைய உள்ளன. ஒருவரது மெட்டபாலிசம் மற்றும் ஆற்றலை வேகப்படுத்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கட்டாயம் தேவையாக உள்ளது.. இவை உடல் வீக்கத்தை குறைத்து, தேங்கி கிடக்கும் கொழுப்புகளையும் எரிக்க உதவுகிறது.
நன்மைகள்: அஸ்வகந்தா இலையை காயவைத்து, அதை பவுடராக தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரில் ஒரு ஸ்பூன் எடுத்து, வெதுவெப்பான பாலில் கலந்து, சிறிது தேன், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தாலே போதும்.. அதுவும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையை வெகுவாக குறையும் என்கிறார்கள். மூலிகைகள் எந்த காலத்திலும் நமக்கு கெடுதியை தந்ததில்லை என்றாலும், இவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு, மருத்துவர்களின் ஆலோசனைகள் கட்டாயம் தேவை.
Weather Data Source: Wettervorhersage 21 tage