வாஷிங்டன்: குளிப்பதனால் உடல் சுத்தம் ஆவது மட்டுமின்றி மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இதனால், வெளியில் அலைந்து விட்டு வந்தால் நீண்ட நேரம் ஒரு குளியல் போட்டுவிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பார்கள்.. இன்னும் சிலரோ குளிப்பதற்கு கூட சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு ஓரிரு கப்களை ஊற்றிவிட்டு வேகமாக குளித்து முடிப்பதை பார்க்க முடியும். குளிக்க சோம்பல் படுபவர்களுக்காக ஜப்பானில் புதிய ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மனித வாஷிங் மெஷின் கண்டறியப்பட்டுள்ளது. இது எப்படி செயல்படும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
தொழில் நுட்பம் வளர வளர வேலைகளை கஷ்டமில்லாமல் செய்ய புதுப்புது கருவிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகிறார்கள். சக்கரத்தில் துவங்கிய கண்டுபிடிப்பு இன்று ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பவம் வரை வளர்ந்து நிற்கிறது. விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் மனிதனின் பல வேலைகள் தற்பொது எளிதாக மாறிவிட்டது.
மனித சலவை இயந்திரம்: வீட்டு வேலைகளை கூட செய்வதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாஷிங் மெஷினில் தொடங்கி ஏஐ ரோபோ வரை மனிதன் வேலையை ஈசியாவற்கு பல புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தற்போது ஜப்பானில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று குளிப்பதற்கு கூட இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறார்க்ளம். வரும் காலத்திற்கான மனித சலவை இயந்திரம் என்ற கருவியை ஜப்பானனின் ஒசாகாவில் உள்ள நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
எப்படி சாத்தியம்?: இந்த வினோத கருவி ஒசாகவில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாம். சுமார் 1000 பேர் இந்த மனித வாஷிங் மெஷினில் குளிர்த்து பார்க்க போகிறார்களாம். வாஷிங் மெஷினுக்குள் துணியை போட்டால் புரட்டி எடுத்து அதில் உள்ள அழுக்குகளையும் எடுத்து பளிச்சென மாற்றிடும். மனித வாஷிங் மெஷின் என்றால் எப்படி சாத்தியம் என பலருக்கும் சந்தேகம் வரலாம்.. இது தொடர்பாக அந்த நிறுவனம் விளக்கியுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்: அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், "போர் விமானத்தின் காக்பிட் அறை போல பிளாஸ்டிக் கருவி ஒன்று உள்ளது. இதில் பாதியளவு தண்னீர் நிரப்பப்பட்டு இருக்குமாம். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீர் உடல்கள் மீது பீய்ச்சி அடிக்கும். இதனால், நமது உடலில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்படுமாம். வெறும் உடலை மட்டும் இன்றி நமது மூளையையும் சுத்தப்படுத்துமாம்.
நமது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் கண்டறிந்து ரிலாக்ஸ் ஆக இருக்க வீடியோக்கள் போன்றவறையும் அந்த இயந்திரத்திற்குள் ஓட விடுமாம். இதனால் குளித்து விட்டு வரும் போது உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆக உணர முடியும் என்று சொல்கிறார்கள். 15 நிமிடத்தில் எந்த சிரமும் இன்றி குளித்துவிட்டு வந்துவிடலாம்" என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நெட்டிசன்கள் கருத்து: குளிக்க கூட சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு இது அவசியமான கருவிதான் என்று நெட்டிசன்கள் ஜாலியாக கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் சில நெட்டிசன்களோ மழைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இந்த மெஷின் இருந்தால் குளிக்க அஞ்சவே வேண்டியது இல்லை என நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
விலை என்ன?: இந்த குளியல் வாஷிங் மெஷின் கடந்த 1970- ஆம் ஆண்டே சான்யோ எலக்ட்ரானிக் என்ற நிறுவனத்தால் உருவக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வாஷிங் மெஷினில் ஹாட் வாட்டருடன் இணைந்து பிளாஸ்டிக் பந்துகள் மசாஜ் செய்வது போல இயங்கி உடலை தூய்மைப்படுத்துவது போல வடிவமைக்கப்பட்டு இருந்ததாம். ஆனால், இது வணிக ரீதியாக வெளியிடப்படவில்லை. தற்பொது கண்காட்சியில் காட்சிப்படுத்தட இருக்கும் புதிய மனித வாஷிங் மெஷின் கூட, பொது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுமா? அல்லது அதன் விலை எவ்வளவு இருக்கும்? என்ற எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
Weather Data Source: Wettervorhersage 21 tage