ஜப்பான்! "நிலவில் பாய இருந்த மூன் ஸ்னைப்பர்!" கடைசி நொடியில் தள்ளி வைப்பு..

post-img

நிலவு குறித்து ஆய்வு செய்ய ஜப்பான் அனுப்ப இருந்த சிறிய விண்கலம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

நிலவு குறித்த ஆய்வுகள் சமீபத்திய நாட்களில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவு குறித்து மாறி மாறி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன. இருப்பினும், அதன் பிறகு பல ஆண்டுகள் இது குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை..

இதற்கிடையே இப்போது நிலவு குறித்து மீண்டும் பல நாடுகள் ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள சாட்டிலைட்களை அனுப்பி வருகிறது.

ஜப்பான் சாட்டிலைட்: நிலவு குறித்து ஆய்வு செய்ய ஜப்பான் இன்று காலை சிறிய ரக சாட்டிலைட்டை அனுப்ப இருந்தது.. இருப்பினும், கடைசி நேரத்தில் அந்த ராக்கெட் நிறுத்தி வைக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக "மூன் ஸ்னைப்பர்" என்ற இந்த ராக்கெட்டை ஏவுவதை மூன்றாவது முறையாக ஜப்பான் இப்போது ஒத்தி வைத்துள்ளது.

ஜப்பானின் தெற்கு தீவான தனேகாஷிமாவில் இருந்து H2-A ராக்கெட் மூலம் இந்த ராக்கெட் கிளம்ப இருந்தது. இதன் சாட்டிலைட்டை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து உருவாக்கியிருந்தது. இந்தச் சூழலில் தான் இந்த ராக்கெட் ஏவுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. அடுத்து எப்போது இந்த சாட்டிலைட் அனுப்பப்படும் என்பது குறித்த ஜப்பான் உடனடியாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வேகம் அதிகம்: காற்றின் வேகம் ஓவராக இருந்துள்ளது.. இதன் காரணமாக ராக்கெட் ஏவுவது நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜப்பான் ஏஜென்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தான் இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனால் ஜப்பான் அனுப்ப இருந்த இந்த ராக்கெட் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், இது கடைசி நேரத்தில் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் இப்போது அனுப்பும் சாட்டிலைட் சோதனை முறை சாட்டிலைட் ஆகும். வழக்கமாக நிலவுக்குச் செல்லும் சாட்டிலைட்கள் எல்லாம் மிகப் பெரிதாகப் பல நூறு கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால், ஜப்பானின் இந்த சாட்டிலைட் மிகவும் லைட்டானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன் ஸ்னைப்பர்: மேலும், ஜப்பான் இதை மூன் ஸ்நைப்பர் என்று அழைக்கிறது. ஏனென்றால் இவர்கள் நிலவில் துல்லியமாக 100 மீட்டர் சுற்றளவில் நிலவில் தரையிறங்கத் திட்டமிட்டுள்ளனர். பொதுவாக நிலவில் தரையிறங்கும் சுற்றளவு என்பது பல கிமீ வரை இருக்கும். ஆனால், இந்த ஜப்பான் சாட்டிலைட் சரியாக 100 மீட்டர் சுற்றளவில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளன. ஜப்பான் கடந்த காலங்களிலும் நிலவில் தரையிறங்க முயன்றுள்ளது. இருப்பினும், அதன் முயற்சிகள் தோல்விகளாகவே இருந்துள்ளது. ஜப்பான் நாட்டில் இருக்கும் ராக்கெட்கள் நமது ஏவூர்திகளைப் போல வலிமையானதாக இல்லை.

அது விண்ணில் கிளம்பும் போது பல சமயம் அது நடுவழியில் வெடித்துச் சிதறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக நிலவில் தரையிறங்க ஜப்பான் முயன்று வரும் நிலையில், இந்த முறையாவது அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post