தற்போது ஐஸ்வர்யா டியர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். அதோடு வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் உயர்திரு 420, அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் காக்க முட்டை திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் திரை ரசிகர்களின் கவனத்தை
கடந்த 1996ம் ஆண்டு தெலுங்கில் ரம்பத்து என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை துறையில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் 2010ம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஐஸ்வர்யா குறிப்பாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் நடித்த திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா ரன் பேபி ரன், ஃபர்ஹானா போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் திரை ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரு சில திரைப்படங்களை தவிர பெரும்பாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஐஸ்வர்யா வட சென்னை திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்” . ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள, 'டியர்' படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க உள்ளது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.