கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி, சேலம் சாலை பகுதியில் இயங்கி வரும் கிராண்ட் பார்க் ஹோட்டலின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பத்து ரூபாய் காயின் கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பத்து ரூபாய் காயின் கொடுக்கும் முதல் 200 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி டோக்கன் மூலம் வழங்கப்பட்டது.
இதனை அறிந்த பிரியாணி பிரியர்கள் 10 ரூபாய் காயினை எடுத்துக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர். இதுகுறித்து பேசிய ஹோட்டல் நிர்வாகத்தின் உரிமையாளர், ‘தன்னுடைய பிறந்தநாளில் இதுபோல ஆபர் அறிவித்ததாகவும் கள்ளக்குறிச்சி பகுதியில் 10 ரூபாய் காயினை யாரும் வாங்கவில்லை. அனைவரும் வாங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆஃபரை முதற்கட்டமாக அறிவித்த்தாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த ஹோட்டலில் பத்து ரூபாய் காயினை வாடிக்கையாளர்கள் கொடுத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் பொதுமக்கள் அடித்துக்கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர்.