கோவை மாதம்பட்டி அருகே தனியார் பள்ளி ஆசிரியை பாக்யலதா.. பூஜை அறையில் இப்படியா நடக்கனும்?

post-img
கோவை: கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே செல்லப்பகவுண்டன் புதூரை சேர்ந்த பாக்யலதா என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த ஆசிரியை, நேற்று முன்தினம் காலை பூஜைஅறைக்கு சென்றவர் திரும்பிவரவே இல்லை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கோவை மாவட்டம் பேரூரை அடுத்த மாதம்பட்டி அருகே செல்லப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருடைய மனைவி பாக்யலதா (வயது40). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். பாக்யலதா, கோவை தீத்திபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆசிரியை பாக்யலதா கடந்த 2 ஆண்டுகளாக உடல் வலி மற்றும் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனக்கவலையுடன் ஆசிரியை பாக்யலதா இருந்த வந்தாாம். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றிருக்கிறார். நேற்று அதிகாலை ராஜேஷ்குமார் எழுந்து பார்த்த போது மனைவியை காணவில்லை. உடனே அவர் தேடிப்பார்த்த போது வீட்டின் பூஜை அறையில் சென்று பார்த்துள்ளார். அங்கு மின் விசிறியில் பாக்யலதா உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்து ராஜேஷ்குமார் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் கோவை பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாக்யலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், உடல்நலத்தால் பாதிக்கப்பட்ட பாக்யலதா உயிரைவிட்டது தெரியவந்தது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்து கோவை பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) கோவையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஐ.டி. பெண் ஊழியரிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய புகாரில் இளைஞ்ர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவையை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் ஐ.டி. நிறுவனத் தில் வேலை செய்கிறார். இவர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், "நான் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என்னுடன் பள்ளிக்கூடத்தில் ஜலாபுதீன் என்பவர் படித்தார். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் கடந்த 2022 -ம் ஆண்டு மீண்டும் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் எனது கிரெடிட் கார்டை வாங்கி வைத்துக் கொண்டு செலவழித்தார். மேலும் நாங்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சென்றோம். அப்போது அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். அதன்பிறகு அவர் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது தொடர்பாக நான் அவருடைய வீட்டுக்கு சென்று கேட்ட போது என்னை மிரட்டியதுடன் தாக்கினார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் ஜலாபுதீன் மீது கோவை மாநகர மத்திய மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Post