ஏடிஎம்மில் பி.எஃப் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு ஓகே.. எப்படி எடுப்பது? இனி ரொம்ப ஈஸி

post-img
சென்னை: இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும். PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 1. ஏஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO சந்தாதாரர்களுக்கு எளிதாக பணம் எடுக்கும் வசதியை அளிக்கும். 3. அரசு வழங்கும் கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். 4. அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். 5. ஏடிஎம்களுக்கு சென்று எளிதாக பணத்தை எடுக்க முடியும். விகிதம் மாற்றம்: பல லட்சம் சந்தாதாரர்களுக்கு இருக்கும் புகார்களை சரி செய்யும் விதமாக மேற்கண்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளதாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இன்னும் சில மாற்றங்களையும் செய்ய உள்ளது. தற்போது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் ஒருவர் 12 சதவீதம் வரை மட்டுமே முதலீடு செய்யலாம் என்று வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் சிலர் கூடுதலாக பங்களிப்பு தர விரும்பலாம். இதை மனதில் வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்த்திக் கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம். 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. வரி மாற்றம்; தொழிலாளர் அமைச்சகம் EPFO இன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களைச் கொண்டு வந்துள்ளது. , இதில் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. முன்பு இதில் பணம் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரு வேலையில் ஆறு மாதங்கள் பணியை முடிக்காத புதிய பணியாளர்கள் முன்பு இபிஎப்ஓ தொகையை எடுக்க முடியாது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. இனி நீங்கள் பணிக்கு சேர்ந்த அடுத்த மாதமே கூட பிஎப் தொகையை நிதியை திரும்பப் பெறத் தகுதி பெறுவீர்கள். அதேபோல் மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மத்திய அரசாங்க அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பொருந்தும்.

Related Post