நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் டா.. தியேட்டரில் ஜெயிலர் படம் பார்த்த தனுஷ்!

post-img

ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டில் தாமதமாகத்தான் வெளியானது. ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே வெளியானதால் ரசிகர்கள் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியின் ரசிகரான தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தார்.

ஜெயிலர்: கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், தனது நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி உள்ளார். பீஸ்ட் படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்ததால், இந்த படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகவும் அதிகமாகவே இருந்தது. மேலும் ஜெயிலர் படத்திலிருந்து வெளியான டிரைலர் படத்தின் மிதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ரோகிணி தியேட்டரில் தனுஷ்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான ஜெயிலர் படத்தை நடிகர் தனுஷ், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இதற்கு முன் வெளியான லிங்கா, காலா, கபாலி போன்ற படங்களை எல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களோடு சேர்த்துப்பார்த்தார்.

சூப்பர் ஸ்டார் ரசிகன் டா: மேலும், இருதினங்களுக்கு முன் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், இது ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு இருந்தார். குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரஜினி மீது அவர் வைத்துள்ள பாசம் குறையவில்லை. தான் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்பதை தனுஷ் மீண்டும் நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அனிருத் வைப்: அதே போல சென்னையில் உள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு ரசிகர்களோடு சேர்ந்து பாட்டுப்பாடி அசத்தினார்.


Related Post