மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தது யார் தெரியுமா?

post-img

உதயநிதி ஸ்டாலின் வடிவேலு நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் மாமன்னன் படத்தில் நடித்த நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் காலத்து சினிமா பிரபலங்களுக்கும், கீதா கைலாசத்தை நிச்சயம் தெரிந்திருக்கும்.

 
 
 

சின்னத்திரை நடிகர்கள் பலரையும் அறிமுகப்படுத்திய பால கைலாசத்தின் மனைவி தான் கீதா கைலாசம். எழுத்தாளரான இவர் இப்போது குணச்சித்திர நடிகையாக குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொடுக்கக்கூடியவர் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. நேரடியாக ஓடிடியில் வெளியான இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்தன. இதில், கபிலன், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வேம்புலி, டான்ஸிக் ரோஸ் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் பட்டையை கிளப்பி ஒரே படத்தில் அவரின் புகழ் உச்சிக்கு சென்று விட்டார்.

 
 

நடிகை கீதா கைலாசம்: இந்த படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து கைத்தட்டலை பெற்றார். இப்படத்தில் பசுபதியின் மனைவியாக ஒரு சில காட்சிகள் வந்து போனாலும் ரசிகர்களின் மனதை தொட்டு இருப்பார் கீதா கைலாசம். இந்த படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் செவிலியராக நடித்திருந்தார்.

 

மாமன்னன் படத்தில்: தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வரும் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாமன்னன் படத்தின் மொத்த கதையை தோளில் தூக்கி சுமந்த வடிவேலுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் கீதா கைலாசம்.

 
 

இயல்பான நடிப்பு: மகன் உதயநிதியை நினைத்து வருத்தப்படுவது, கணவர் வடிவேலுவை மாமா மாமா என அழைப்பது என, அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ரௌடிகள் வீட்டை அடித்து நொறுக்கும் போது,பயந்து போய் கட்டிலுக்கு அடியில் பயந்தோடி ஒளிந்து இருக்கும் காட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின், வலியையும் கண்முன் கொண்டுவந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் வடிவேலுவுடன் நடிப்பது பயமாகவும்,சவாலாகவும் இருந்தது என்று கூறியிருந்தார்.

Related Post