நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது . ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்தனை திதிரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.உலகம் முழுவதும் 4ஆயிரம் திரைகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
ஜெயிலர் படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். கட் அவுட் வைதது, பட்டாசுகள் , மலர்கள் தூவி ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களோடு ரசிகர்களாக:
குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்து வருகின்றனர்.
Jailer Inside reports:
காலையில் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் படத்தை படுமோசமாக விமர்சித்து வருகின்றனர். ஜெயிலர் படம் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், Jailer Inside reports என பதிவிட்டு, கதை ரொம்ப மோசம், கதை லேக்கா இருக்கு, நெல்சனின் டார்க் காமெடி வொர்க் அவுட்டாகவில்லை. முதல் பாதி ஒகே, இரண்டாம் பாதி ஊத்திக்கிச்சு என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது பாதி செம மொக்க:
ஜெயிலர் படம் பார்த்த ரசிகர் ஒருவர் 2வது பாதியில் என் பக்கத்துல இருதா ரெண்டு பேருக்கு வீட்டுக்கு போயிடாக, அந்த அளவிற்கு மொக்க இரண்டாவது பாதிக்கு, முதல் பாதியே பரவால என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வில்லனே பரவால்ல:
இதற்கு முன்னர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் வில்லனையும் ஜெயிலர் பட வில்லனையும் ஒப்பிட்டு ஒரு ரசிகர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், வசந்த் ரவி தான் வில்லன் என்று பதிவிட்டு வடிவேலு வெளியில் ஓடிவரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பீஸ்ட் படத்தில் வில்லனாக வந்தவரின் கதாபாத்திரம் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.