சுக்கிரன் பெயர்ச்சி 2025: சுக்கிரன், குருவால் வரும் அதிர்ஷ்டம்.. மேஷ ராசிக்கு பணமழை கொட்ட போகுது

post-img
சுக்கிரன் பெயர்ச்சி பலன்: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2025 ஜனவரி உச்சத்தில் இருக்கும் சுக்கிரனால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Sukkiran peyarchi for mesham) 2025 ஆம் ஆண்டு சனி, குரு, ராகு கேது உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகவுள்ளன. 2025 ஆம் ஆண்டிலாவது தங்களின் கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். பொதுவாக பணவரவு, வீடு, மனை, வாகனம், நகை உள்ளிட்ட சொத்துகள் வாங்குவதற்கு சுக்கிரன் அமைப்பு முக்கியமாகும். 2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் பெயர்ச்சியும் உள்ளது. பணவரவு, சொத்துகள் வாங்குதல், புதிய வாகனம், தொழில் விருத்தி உள்ளிட்ட பல்வேறு ஆசைகள் உள்ளன. பொதுவாக சுகபோக வாழ்க்கைக்கு சுக்கிரன் கிரகம் முக்கியமான அமைப்பாகும். சுக்கிரன் கிரகம் அமைப்பு இருந்தால் ஒருவருக்கு பணம், மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா வசதிகளும் கிடைத்து நிறைவான வாழ்க்கை அமையும். பொதுவாக சுக்கிரன் ஒரு வருடத்தில் 20 - 45 நாட்கள் உச்சத்தில் இருப்பார். எப்போதுமே உச்சமடையும் கிரகங்களுக்கு தான் சக்தி அதிகம் இருக்கும். 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைய உள்ளார். ஜனவரி 28 ஆம் சுக்கிரன் பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் உச்சமடையும்போது ஒரு யோகம் உண்டு. அதே சுக்கிரன் குருவுடன் பரிவர்த்தனை செய்யும்போது ஒரு யோகம் கிடைக்கும். மேலும் புதனுடன் பரிவர்த்தனை ஆகும்போது சுக்கிரன் மதன கோபால யோகம் கிடைக்கும். இதுபோல ராசிக்கு தகுந்தவாறு ராஜ யோகம், லட்சுமி நாராயண யோகம் என்று பல யோகங்கள் உள்ளன. சுக்கிரன் ராகுவுடன் இணையும்போதும் பெரிய திருப்புமுனை கிடைக்கும். சுக்கிரன் செவ்வாயை தவிர சனி, சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களையும் சந்திக்கும். கலைத்துறை, ஆடம்பர வாழ்க்கை உள்ளிட்ட பலவற்றுக்கு சுக்கிரன் அமைப்பு முக்கியம். 2025 ஜனவரி 28 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை சுக்கிரன் உச்சத்தில் இருப்பார். ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பெயர்ச்சி ஆகிவிடுவார். சுக்கிரன் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காண போகிறோம். சுக்கிரன் உச்சமடைந்தால் மேஷம் 12 ஆம் இடமாக பார்ப்பார். 12 ஆம் வீடு என்றால் செலவு. இதனால் சுப செலவுகள், பயணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதங்கள் நல்ல பலன்களை கொடுக்கும். மகன் அல்லது மகள் உயர்கல்விக்காக கடன் வாங்கலாம். வீட்டுக்கு தேவையான தங்க நகைகள், வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் சுற்றுலா நல்லபடியாக அமையும். சுப விரயங்கள் அதிகரிப்பதால் கையிருப்பு பெருமளவுக்கு செலவாகும். இது நல்ல காரியத்துக்கு நடப்பதால் கையிருப்பைப் பற்றி கவலைப்படக் கூடாது. குருவுடன் சுக்கிரன் பரிவர்த்தனை ஆகும். அப்போது குருவின் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும் மாறி இருப்பார்கள். அப்போது வரவும், செலவும் மாறி மாறி வரும். வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவதற்கு இது சரியான நேரம். பெரியளவுக்கு வரவு இல்லாவிடினும் மனம் நிறைவாக இருக்கும். உங்கள் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்றும் நேரம் இது. இந்த காலகட்டத்தில் கணவன் - மனைவி மற்றும் காதல் உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நிலவும்.

Related Post