பெரியார் போட்டோவுடன்.. நடிகர் விஜய் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து! என்ன சொல்லி இருக்காரு பாருங்க

post-img
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து கூறியுள்ளார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியார் உள்பட அவரது கட்சியின் பிற கொள்கை தலைவர்களின் போட்டோவுடன் கூடிய அறிக்கையில் அவர் இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சார்பில் அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னளில் அனைவரது இல்லங்களிலும், அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார். இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை நடிகர் விஜய் வெக கட்சியின் கொள்கை தலைவர்களின் போட்டோ மற்றும் கிறிஸ்துமஸ் மரத்துடன் தனது போட்டோவை இணைத்து அறிக்கை போன்று வெளியிட்டுள்ளார். அதில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாளின் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட விஜய் தனது முதல் அரசியல் மேடையில் கொள்கையை விவரித்தபோதே அதுபற்றி விளக்கம் கொடுத்துவிட்டார். பெரியார் விஷயத்தில் அவரது கடவுள் மறுப்பு கொள்கையை தவிர மற்ற கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post