தோழியை அருகே அமரவைத்து விமானம் இயக்கிய பைலட்... நடுவானில் அதிர்ச்சி சம்பவம்..!

post-img

விமானப் பயணத்தின் போது, விமானி ஒருவர் தனது தோழியை அருகே அமரவைத்துக் கொண்டு, விமானத்தை இயக்கியது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்துள்ளது. அந்த விமானத்தை இயக்கிய விமானி, அதே விமானத்தில் பயணித்த தனது தோழியை, விமானி அறைக்கு வரவழைத்ததுடன், அருகே அமரவைத்துக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளார். மேலும், தனது தோழிக்கு மதுபானம் வழங்குமாறு பணிப்பெண்ணுக்கும் தெரிவித்துள்ளார்.

 

 

ஆனால், அவ்வாறு வழங்க முடியாது என பணிப்பெண் கூறியதால், அவரை திட்டி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து பணிப்பெண் புகாரளித்துள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

 

விமான பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என கூறியுள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

Related Post