இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் இன்று கைது.. படகுகள் சேதம்!

post-img

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது எப்படி நடந்தது: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். பல்வேறு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு எல்லை தாண்டியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
காலை 9 மணிக்கு தமிழக மீனவர்கள் அந்த முகாமில் அடைத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, வந்த கடற்படை அதிகாரிகள், எல்லை மீறி நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் வலைகளை அங்கேயே அறுத்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர் கைதுகள்: இந்திய பெருங்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மீண்டும் தொடர்கதையாகி இருக்கிறது. சில நாட்களாக அமைதியாக இருந்த இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்ய தொடங்கி உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்துள்ளது.
கைது செய்யப்பட மீனவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று இலங்கையில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களிடம் மீண்டும் அத்துமீற தொடங்கி உள்ளனர். முக்கியமாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும், அவர்களின் படகுகளை திரும்பி தர மறுப்பதும் அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது.. அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை
நடவடிக்கை இல்லை: இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் இதில் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. சமீபத்தில்தான் , நாகை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் . ஒரு படகில் சென்ற 8 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை உடனே விடுவிக்க வேண்டும். இது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Post