திருநெல்வேலி: பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்லும் சைக்கோ ஒருவரின் திருடி செல்லும் கேவலமான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. டீசர்ட், பேண்ட் அணிந்தபடி டிப்டாப்பாக கண்ணாடி அணிந்த நடுத்தர வயது நபர், வீட்டின் முன்புறம் காயப்போட்டிருந்த துணிகளை நோட்டம் விடுகிறார். பின்னர் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அதனை திருடி தனது பாக்கெட்டில் போட்டு செல்கிறார்.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாகப் பெண்களை தங்கள் இச்சைக்கு அனுபவிக்கும் போகப்பொருளாக நினைப்பவர்களால் மோசமான குற்றங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. பெண்களை தவறாக பார்ப்பது ஒருபுறம் எனில், அதற்கு அவர்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் என்று குறை சொல்லும் கேவலமும் இங்கு அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களை தடுக்க போக்சோ சட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க வன்கொடுமை தடுப்பு சட்டம் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களில் கைதானால் ஜாமீன் கிடைப்பதே சவாலானது. விரைவு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி விரைந்து நீதி பெற்றுவிட முடியும்.
ஆனால் என்ன தான் சட்டங்கள் போட்டாலும் பெண்களை பற்றி பார்வை, சில கொடூரர்களுக்கு மாறவே இல்லை.. பெண்களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களாக இருப்பார்கள், நண்பர்களாகவும் இருப்பார்கள், தாத்தா வயதில், அப்பா வயதில் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால், மோசமான வக்கிரத்தை வெளிப்படுத்தி விடுகிறார்கள். வக்கிர எண்ணம் படைத்த பலர் இன்றும் சுதந்திரமாகவே உலா வருகிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பது சவாலானது. எனினும் யாரையும் நம்பாமல் கவனமாக இருப்பதே சிறந்த பாதுகாப்பான விஷயமாக இன்றைக்கு இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் வீட்டை திறக்க தனியாக சென்ற பிளஸ் 1 மாணவியை பின்னால் இருந்து வந்த மர்ம நபர், கைக்குட்டையில் மயக்க மருந்தை கலந்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். அவர் யார் என்றே அந்த பெண்ணுக்கு இன்று வரை தெரியவில்லை.. இதேபோல் சில மர்ம நபர்கள்,தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறுவது நடக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது ஒருபுறம்எனில், பெண்களின் உள்ளாடைகளை திருடி, அதை வைத்து இன்பம் காணும் சில சைக்கோக்களும் இருக்கிறார்கள்..
திருநெல்வேலியில் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்லும் சைக்கோ ஒருவரின் திருடி செல்லும் கேவலமான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. டீசர்ட், பேண்ட் அணிந்தபடி டிப்டாப்பாக கண்ணாடி அணிந்த நடுத்தர வயது நபர், வீட்டின் முன்புறம் காயப்போட்டிருந்த துணிகளை நோட்டம் விடுகிறார். கண்ணாடி அணிந்திருந்த அந்த நபர். பின்னர் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அதனை திருடி தனது பாக்கெட்டில் போட்டு செல்கிறார். இப்படியாக அந்த வீடியோ முடிகிறது. அவர் யார் என்பது இப்போது வரை தெரியவரவில்லை.