வேகமெடுக்கும் Madras Eye: பரவாமல் தடுப்பது எப்படி? நோய் அறிகுறிகள் யாவை?

post-img

சென்னை: மெட்ராஸ் ஐ நோய் மற்றவர்களுக்கு பரவுவதை எப்படி, இதன் அறிகுறிகள் என்னென்ன?
தமிழகத்தில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி விடுகிறது. மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் சிவக்கும், வலி இருக்கும். அழுக்கு சேர்ந்து காலையில் விழிக்கும் போது கண்களை திறக்க முடியாதபடி ஒட்டிக் கொள்ளும்.


இதற்கு மருந்து கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி போடாமல், கண் மருத்துவரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை போட்டாலே விரைவில் குணமாகிவிடும். இந்த நோய் முதலில் 1918 ஆம் ஆண்டு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டால் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது.


இதன் அறிகுறிகளாக கண் வலி , கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போல் உணர்வு ஏற்படுதல் ஆகும். இது பருவநிலை மாறுபாட்டால் வரும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் வரக் கூடியது.


இந்த வைரஸுக்கு பெயர் entro virus, Adino virus ஆகும். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவும். அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கருவிகளை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது.


கண் நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமக இருக்கும் இடங்களுக்குச் செல்லும் போது அதிகமாக பரவிவிடும். இந்த நோய் ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள் மட்டுமே இருக்கும். இந்த நோய் பாதித்தால் கண்களை நல்ல நீரில் அடிக்கடி கழுவ வேண்டும். கண்களுக்கு ஓய்வு கொடுத்தல் வேண்டும். டிவி, போனை பார்க்க வேண்டாம். கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும். சுயமாக மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


கண்களுக்கு மருந்து போட்டவுடன் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மர்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய உதவும்.

 

Related Post