தமிழ்நாட்டின் கோத்தகிரியின் பிறந்த பக்கா தமிழ் பொண்ணான சாய் பல்லவி உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார்.
கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு 31 வயசு ஆகுது: 1992ம் ஆண்டு மே 9ம் தேதி பிறந்த சாய் பல்லவி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எத்தனை கோடிகள் சொத்து இருந்தாலும், எப்போதுமே மிகவும் எளிமையாக இருப்பதையே விரும்புவர் சாய் பல்லவி. அவரது எளிமையே ரசிகர்களுக்கு அவரை பார்த்த முதல் நொடியிலேயே பிடிக்க வைத்து விடுகிறது. கவர்ச்சிகரமான ஆடைகள் எல்லாம் அணிந்து கொண்டு விழா மேடைகளுக்கு வர மாட்டார் சிம்பிளா ஒரு சுடிதார் அல்லது ஒரு சேலை போதும் அத்துடன் தனது புன்னகையை கலந்து சாய் பல்லவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
நல்லா நடிக்கும் நடிகை: சினிமாவில் டாப் ஹீரோயின்களாக இருக்கும் பலரும் எந்தளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியை காட்ட முடியுமோ அப்படி எல்லாம் நடித்து வந்தவர்கள் தான். ஆனால், நடிகைக்கு முதலில் நடிப்பு மட்டும் தான் முக்கியம். நடிப்பு இருந்தாலே டாப் நடிகையாக வலம் வரலாம் என நிரூபித்து வெகு சில நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மருத்துவம் படித்து விட்டு நடிகைகளாக மாறியவர் பட்டியலிலும் சாய் பல்லவி இடம்பிடித்திருக்கிறார்.
ஹோம்லியாக நடித்து வந்த சாய் பல்லவி ரவுடி பேபியில் போட்ட கவர்ச்சி நடனம் ரசிகர்களை மெர்சலாக்கியது என்றே சொல்லலாம். ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி அந்த சூலத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட அப்படியே அம்மனே இறங்கி வந்து ஆடியது போல இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.
கார்கி படத்தில் தப்பு செஞ்சது அப்பாவாவே இருந்தாலும், அவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை கடந்த ஆண்டு மீண்டும் நிரூபித்தார். அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சாய் பல்லவி வீடு: பிறந்த ஊரான கோத்தகிரியில் ஒரு வீடு நடிகை சாய் பல்லவிக்கு உள்ளது. ஆனால், தற்போது குடும்பத்துடன் கோவையில் ஒரு சூப்பரான அழகிய வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சாய் பல்லவி. கார்கள்: நடிகை சாய் பல்லவிக்கு பெரிதாக சொகுசு கார்களில் எல்லாம் ஆர்வம் இல்லை. ஆடி Q3, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் சில சாதாரண கார்கள் மட்டுமே அவரது காராஜில் அணிவகுத்துள்ளன
சொத்து மதிப்பு: 31 வயதாகும் நடிகை சாய் பல்லவிக்கு 31 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்ததன் மூலமாகவும் விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலமாகவும் இத்தனை கோடி சொத்துக்களை இளம் வயதிலேயே சேர்த்து இருக்கிறார் சாய் பல்லவி. புதிய படங்களுக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் சாய் பல்லவி.