ஹைதராபாத்; தெலுங்கானா சட்டசபை தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (BC) பெரும்பான்மையினராக இருக்கும் நிஜாமாபாத் பகுதியின் 3 தொகுதிகளுக்கு BC வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகியவை படுதீவிரமாக உள்ளன.
தெலுங்கானா சட்டசபைக்கு வரும் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கல் 115 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக, பிற மாநில பாஜக எம்.எல்.ஏக்களை வரவழைத்து ஆய்வு நடத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளது.
தெலுங்கானா தேர்தல் களத்தில் நிஜமாபாத் பகுதி பெரும் கவனத்துக்குரியதாக இடம்பெற்றுள்ளது. இதர பிற்ப்டுத்தப்பட்டோர் பெரும்பான்மையினராக வசிக்கும் இந்தப் பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்துவது என்பதில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக உறுதியாக உள்ளன. பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பாஜிரெட்டி கோவர்தன் நிஜாமாபாத் ரூரல், ஜஜலா சுரேந்தர், யெல்லாரெட்டி தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே முன்னூறு காப்பு ஜாதியை சேர்ந்தவர்கள். அரசு கொறாடாவும் கம்மரெட்டி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான கம்பா கோவர்தன் பெயர் இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பேறவில்லை. அவரது தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். ஒருங்கிணைந்த நிஜாமாபாத்- அதாவது அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், மேகத் மாவட்டங்களில் பெரும்பான்மை ஜாதியினராக இருக்கும் பெரிகா ஜாதியை சேர்ந்தவர் கம்பா கோவர்தன்.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி BC வேட்பாளர்களை தேடித் தேடி பிடித்து நிஜாமாபாத் பகுதிகளில் நிறுத்தியது. இதில் யெல்லாரெட்டி தொகுதியில் வென்ற ஜஜலா சுரேந்தர், பின்னர் பிஆர்எஸ் கட்சியில் இணைந்துவிட்டார். இந்த முறையும் காங்கிரஸ் கட்சி BC வேட்பாளர்களுக்க் மட்டுமே இந்த தொகுதிகளில் சீட் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறதாம். இதனால் BC ஜாதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சீட் கேட்டு விண்ணப்பித்து "தேவுடு" காத்து வருகின்றனர்.
இதேநிலைமைதான் பாஜகவிலும் இருக்கிறது. ஆனால் இந்த பகுதிகளில் பாஜகவின் பிசி முகங்கள் என அறியப்பட்ட பிரபலங்கள் யாரும் இல்லையாம். இதனால் முகம் அறியாத நபர்கள்தான் பாஜகவ்ன் பிசி வேட்பாளர்களாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் நிஜாமாபாத் பிராந்தியத்தில் பாஜக டெபாசிட் தேறுவதும் கடினம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மோடிதான் காரணம்! சந்திரயான் 3 வெற்றி குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்