கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 22 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் 10 கிராம மக்களுக்கு வனத்துறை பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சானமாவு வனப்பகுதியில் இருந்த யானைகள் நேற்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால் உணவு தேடி ஊடேதுர்க்கம் காட்டு பகுதிக்கு வந்த யானைகள் தற்போது கெலமங்கலம் அடுத்த ஒன்னுகுறிக்கி என்னும் கிராம மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இதையடுத்து, ஒன்னுக்குறிக்கி, மல்லேப்பாளையம், ஜெக்கேரி, கோட்டட்டி உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இராயக்கோட்டை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை யானைகளை ஊடேதுர்க்கம் அல்லது தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
மக்கள் என்ன செய்யலாம்?
வனத்துறையின் அறிவுரை: