காளியம்மாள் சொல்லிட்டாங்களே.. "திரும்ப திரும்ப பேசற நீ.. என் அண்ணன் ரொம்ப பாதிச்சிட்ட

post-img

சென்னை: எங்கள் அண்ணன் சீமான், இந்த பிரச்சனையால் மிகவும் பாதிப்படைந்துவிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் கருத்து கூறியிருக்கிறார்.
இன்று சீமான் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது, "மக்களுக்கு போராடிய வகையில் 128 வழக்குகள் உள்ளன. அதை எடுக்க முடியவில்லை. பெண் வழக்கால், அசிங்கப்படுத்தி விடலாம். மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விடலாம். நன்மதிப்பை சிதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது.


13 வருடங்கள்: ஒரு மாதகாலமாக பேசக்கூடிய பேச்சா... நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையா... பணமும் கொடுக்கல, நகையும் கொடுக்கல. இந்த பெண்களால் நான் 13 வருடம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். நான், எனது குடும்பம், என்னைச் சார்ந்து இருக்கும் லட்சக்கணக்கானோர் பட்ட கஷ்டம். ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஒருவரை வன்கொடுமை செய்வதை விட கொடுமை உள்ளதா?


என்னுடைய மவுனத்தில் அதிகமாக பொய் பேசிவிட்டீர்கள். திருமணம், கருக்கலைப்பு என்கிறார்கள். அதற்கான ஆதாரம் உள்ளதா? 8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. வீரலட்சுமி போன்றோருக்கு மன்னிப்பு கிடையாது, பொது மன்னிப்பு கேட்கனும்" என்றெல்லாம் பேசியிருந்தார் சீமான். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், இன்று செய்தியாளர்களிடம் பேசும்போதும், இதே மனநிலைமையைதான் வெளிப்படுத்தினார்..

 

விஜயலட்சுமி: "இப்போது நடந்துள்ள இந்த கால அவகாசத்திற்கு, என் அண்ணனின் ஜனநாயகம்தான் உண்மையிலேயே காரணம்.. 2 நாளைக்கு முன்புகூட விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தாங்க..


அதில், என் அண்ணனையும், கட்சியில் உள்ள பெண்களையும் தவறாக பேசியிருந்தாங்க.. ஒருமையில் பேசியிருந்தாங்க.. அதற்கு நான் எதிர்ப்பும் தெரிவித்திருந்தேன்.. உடனே எனக்காகவும் வீடியோ போட ஆரம்பிச்சிட்டாங்க. என்னையும் அதில் அவமரியாதை பேசியிருந்தாங்க.. நான் அப்பவே, மான நஷ்ட வழக்கு போட தயாராகினேன்..


சரி, வேண்டாம், கடந்து போவோம் என்று நினைத்துவிட்டுவிட்டோம்.. விஜயலட்சுமி இப்போது, இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டதாக சென்றாலும், நாளைக்கு மறுபடியும் கோர்ட்டுக்கு வருவாங்க.. ஏனென்றால், எந்த மனநிலையில், அவர் எப்படி இருப்பார் என்று யாராலுமே கணிக்க முடியாது. விசாரணைக்கு நாங்கள் வருவோம் என்று சொல்லியிருந்தோம். நேரடியாக நாங்கள் வந்துவிடுவோம் என்பதற்காகவே, இப்போது வாபஸ் பெற்றுள்ளதாக தெரிகிறது.


ஊடகங்கள்: என்ன மாதிரியான மனநிலைமையில் விஜயலட்சுமி இருக்கிறார் என்றே தெரியவில்லை.. மாற்றி மாற்றி அவர் பேசுவதைத்தான், இந்த ஊடகங்கள் பெரிதாக பார்க்கிறதா?
ஒரு பெரிய கட்சியாக, பெரிய அமைப்பாக நாம் தமிழர் கட்சி உள்ளதால், அதில் பலர் நம்பி பயணம் செய்கிறார்கள். எதிர்காலத்தில் பெரிய நோக்கத்துடன் ஓடும் அமைப்பாகவும் இது விளங்குகிறது. தமிழகத்தில் 3வது இடத்தில் உள்ளோம். லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் இதில் உள்ளார்கள்.. இப்படி சேற்றை வாறி இறைப்பதையெல்லாம் இனியும் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது.


மன உளைச்சல்: கடந்த 20 நாட்களாகவே வேறு எந்த செயலையும் செய்யவிடவில்லை.. இந்நேரம் 3வது சுற்றுப்பயணத்தை எங்கள் அண்ணன் துவங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்தம்மா ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு வீடியோ போடுறாங்க.. இந்த விஷயமே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தால், ஒரு மனிதனை அது உளவியலாக பாதிப்பை தந்துவிடும்.. ஊடகங்கள் எப்போது சந்தித்தாலும், இந்த ஒரு கேள்வியையே கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி? என்று கேள்வி எழுப்பினார் காளியம்மாள்.

 

Related Post