வாஷிங்டன்: அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அமெரிக்க அரசு மொத்தமாக ஷட் டவுன் அதாவது முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதென்ன ஷட் டவுன். இதனால் அமெரிக்காவில் என்னவெல்லாம் பாதிக்கப்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் செலவினங்கள் தொடர்பான மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கலான போதிலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. உடனடியாக அந்நாட்டு நாடாளுமன்றம் எமர்ஜென்சி பிளானை கொண்டு வராவிட்டால் நாளை முதல் அமெரிக்கா அரசு ஷட் டவுன் ஆகும்.
மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்றிரவு வரை மட்டுமே டைம் இருக்கிறது. இல்லையெனில் அங்குள்ள பெடரல் அமைப்புகள் மூடப்படும். அதாவது பல ஆயிரம் அமெரிக்க பெடரல் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அல்லது ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது குறித்து 10 முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
அமெரிக்கா மொத்தமாக முடங்கும் ஆபத்து.. சொந்த கட்சியினரே கைவிட்டதால் டிரம்பிற்கு சிக்கல்! அடுத்து என்ன
சம்பளம் இல்லாமல் வேலை செய்ய நேரிடும்: