ஒரே மாதத்தில் 7 கிலோ எடையை குறைத்தேன்.. சீரியல் நடிகையின் சீக்ரட் டிப்ஸ்

post-img
Courtesy: instagram
 
வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் தங்களின் உடல் எடையை கூட்டுவதும் பின்னர் சட்டென குறைப்பதும் பலருக்கும் தெரியும். திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு தங்களின் உடல் அமைப்பை அவ்வப்போது மாற்றிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் சின்னத்திரையில் அப்படி இல்லை இங்கு கதை தான் முக்கியம் தவிர உடல் தோற்றத்தை பார்வையாளர்கள் பெரிதும் கவனிப்பதில்லை. 
Courtesy: instagram
 
 
 
இருப்பினும் நடிகைகளுக்கு சில எழுதப்படாத கட்டுப்பாடுகள் உள்ளன, ஸ்லிம்மாக இருந்தால் தான் கதாநாயகி வாய்ப்பு இல்லை என்றல் சித்தி, அக்கா, பெரியம்மா வாய்ப்புகள் தான் கிடைக்கும். இதனால் சின்னத்திரை கதாநாயகிகள் தங்களின் உடல் தோற்றத்தை எப்போதும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகின்றனர். 
Courtesy: instagram
 
 
 
 
அந்தவகையில் தற்போது சின்னத்திரை நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஒரு மாதத்தில் 7 கிலோ வரை உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா அஞ்சன்.
Courtesy: instagram
 
 
 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சித்து மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். தற்போது இந்த சீரியலும் முடிந்துவிட்டது. 
Courtesy: instagram
 
 
 
 
தற்போது சின்னத்திரையில் ஆக்ட்டிவாக இல்லாமல் இருக்கும் ஸ்ரேயா, தனது வீட்டில் சும்மாவே இருந்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டதாம். இதனால் ஜிம் ஒர்க் அவுட் செய்தும் உணவு கட்டுப்பாடுடன் ஒரே மாதத்தில் 7 கிலோ வரை எடை குறைத்துள்ளார். ஒரு மாதத்தில் உடல் எடையை எப்படி குறைத்தார் என்பதை பார்ப்போம்..
Courtesy: instagram
 
 
 
தனது உணவு பழக்கவழக்த்தில் அதிக மாற்றம் கொண்டு வந்த ஸ்ரேயா, தினமும் காலை எழுந்தவுடன் வேறு வயிற்றில் சப்ஜா விதை, தேன், பப்பாளி பலன்களை சேர்த்துக்கொள்வாராம். அதேபோல் பாலக்கீரை மற்றும் புதினாவை சேர்த்து ஒன்றாக அரைத்து சிறிது எலுமிச்சை சார் விட்டு வெறும் வயிற்றில் குடிப்பாராம். அதிகமாக காய்கறிகளை எடுத்துக்கொண்டாராம். 
Courtesy: instagram
 
 
 
 
அதேபோல் மாலையில் வேகவைத்த பருப்பு வகைகளை சாப்பிடுவாராம், உடற்பயிற்சி மிக முக்கியமாம், காலை 20 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்து ஒரே மாதத்தில் 7 கிலோ எடையை குறைத்தாராம்.. நடிகை ஸ்ரேயாவின் இந்த எடை குறைப்பு டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்களேன்.. 
Courtesy: instagram
 
 
 

Related Post