95 ஆண்டுகளாகவே "இந்த" நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லையாம்.. அது ஏன் தெரியுமா! சர்ப்ரைஸ் காரணம்

post-img
ரோம்: மக்கள் தொகை சரிவு என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனால், இங்கே ஒரு நாட்டில் சுமார் 95 ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு இல்லையாம்.. ஆம். அந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறந்ததே இல்லையாம்.. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். உலகெங்கும் இப்போது மக்கள்தொகை சரிவே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை ஆபத்தான அளவில் சரிந்து வருவதால் பூமியில் இருந்த அந்த நாடுகள் காணாமல் போகலாம் என்று கூட எச்சரிக்கைகள் வந்துள்ளது. ஆனால், இங்கு ஒரு நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவே இல்லையாம்.. இந்தாண்டு மட்டும் ஏதோ இப்படி நடந்துவிட்டது போல என நினைக்காதீர்கள். கடந்த 95 ஆண்டுகளாகவே இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறந்ததே இல்லையாம். அப்படி என்ன நாடு.. இதற்கு என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம். அதுதான் வாடிகன் சிட்டி: கிறிஸ்துவத்தின் தலைமையிடமாகக் கருதப்படும் வாடிகன் சிட்டியில் தான் இப்படி நடந்துள்ளது. இங்கு தான் கடந்த 95 ஆண்டுகளாக ஒரு குழந்தையும் பிறக்கவில்லை.. உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் சிட்டியின் மொத்த அளவே 0.49 சதுர கிமீ தான். மேலும், இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையும் வெறும் 764தான். அதான் 764 பேர் இருக்கிறார்களே.. அவர்களுக்கும் கூட குழந்தை பிறக்கவில்லையா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது வாடிகன் நகரில் குழந்தை பிறப்பு நடக்கக் கூடாது என்பது விதியாகும். அங்கு பெரும்பாலும் பாதிரியார்களே வசிக்கும் நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் தடை இருக்கிறது. அதையும் தாண்டி அங்கு யாராவது கருவுற்றாலும் அங்கே பிரசவம் பார்க்க மருத்துவமனைகள் கூட இல்லையாம். இதனால் இங்குள்ள பெண்கள் யாரேனும் கர்ப்பமாகி விட்டால், பிரசவ நேரம் நெருங்கும் போது, அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள். 95 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை: வாடிகன் சிட்டி விதிகளின்படி அவர்கள் இத்தாலி செல்ல வேண்டும் என்பதால் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்கள் அங்குச் சென்றுவிடுவார்கள்.. இந்த விதி அங்கு மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அங்கு 95 ஆண்டுகளில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. வாடிகன் நகரம் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராகக் கருதப்படும் போப்பின் வசிப்பிடமாக இருக்கிறது. அங்குக் குழந்தை பிறப்புக்கு மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக அங்கு வசிக்கும் ஆண்களும் பெண்களும் மினி ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. மேலும், பெண்கள் இருக்கிறார்கள் ஆனால்: வாடிகன் நகரில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் அங்குள்ள ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் அல்லது பிற ஊழியர்களின் மனைவிகளே ஆவர். இப்படி மொத்தமே 50க்கு குறைவான பெண்களே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் தங்கள் முழு அங்கேயே இருப்பதில்லை. சில ஆண்டுகள் மட்டுமே வசிப்பார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பிரசவம் இருந்தாலும் அவர்கள் முன்பு குறிப்பிட்டது போல இத்தாலி செல்ல வேண்டும். இவ்வளவு குறைவான மக்கள்தொகை என்பதால் பாதுகாப்புப் படை எனத் தனியாக யாரும் இல்லை. இதனால் வாடிக்கன் போப் மற்றும் அவரது அரண்மனையைப் பாதுகாக்க சுமார் 130 வீரர்கள் சுவிஸ் ராணுவத்தில் இருந்து பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post