நள்ளிரவில் பிரியாணி, பிசா, பர்கர் சாப்பிட வேண்டுமா – சென்னையின் ஃபுட் ஸ்ட்ரீட்ஸ்!

post-img

மாறிவிட் ட நவீன காலத்தில் இரவு பகல் பாராமல் படித்துக் கொண்டும், வேலை செய்து கொண்டும் வருகின்றனர். இளம் மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், குடும்பங்கள் மற்றும் ஓய்வெடுக்கும் நண்பர்கள் அனைவரும் நள்ளிரவில் பசிக்கும் போது சென்னையின் இந்த நள்ளிரவு ஃபுட் ஸ்ட்ரீட்ஸ்களுக்கு செல்லுங்கள்!

கோரா ஃபுட் ஸ்ட்ரீட்

அண்ணாநகரில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட் ஒரே கூரையின் கீழ், உலகம் முழுவதிலுமிருந்து வரும் உணவுகளில் ஈடுபட ஒரு சரியான வாய்ப்பை வழங்குகிறது. பீட்சா, பிர்ரியா டகோஸ், நூடுல்ஸ், மோமோஸ் மற்றும் போபா டீ முதல் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் ஃப்ரை, ஐஸ்கிரீம் வரை எல்லாமும் கிடைக்கிறது. இங்கே 40 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களும் மற்றும் 5,700 க்கும் மேற்பட்ட விதவிதமான உணவுகளும் கிடைக்கின்றன. நள்ளிரவில் நீங்கள் அண்ணா நகர் பக்கம் இருந்தால் இந்த இடத்திற்கு சென்று ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்.

கத்திப்பாரா நகர சதுக்கம்

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் திருப்பங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் இந்த மைய இடத்தில் உள்ள 25 உணவகங்கள் உள்ளன. ஜூனியர் குப்பண்ணா, ஏ2பி, கேஎஃப்சி போன்ற பல உணவகங்கள் உள்ளன. இங்குள்ள 25 உணவகங்களும் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கிறது. இரவு நேரத்தில் நண்பர்களுடன் அவுட்டிங் செல்பவர்களும், படத்திற்கு செல்பவர்களும், ஐடி யில் வேலை செய்பவர்களும் தான் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பட்டியலில் அடங்குவார்கள். ஜூஸ், ஐஸ்கிரீம் தொடங்கி பிரியாணி, சிக்கன் பக்கெட் வரை எல்லாமும் இங்கு கிடைக்கிறது.

பிலால் ஜங்க்ஷன்

சென்னையின் மையத்தில் அமைந்துள்ள இந்த பிலால் ஜங்க்ஷன் பிரபல காபி பிரேக்கை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும். நள்ளிரவு வேளையில் கூட இங்கு காபி, டீ, கேடி ரோல், சிக்கன் மற்றும் மட்டன் சமோசாக்கள், பஃப்ஸ் மற்றும் ரோல்ஸ் மற்றும் புகழ்பெற்ற உஸ்மானியா பிஸ்கட்கள் ஆகியவற்றை ருசிக்கலாம். அங்கே கிடைக்கும் பன் பட்டர் ஜாமுக்கு இணையான சுவையை நீங்கள் வேறு எங்குமே சுவைக்க முடியாது தெரியுமா மக்களே. நள்ளிரவில் சிந்தாதிரிப்பேட்டையில் சுற்றும் போது இங்கே சென்று சுவைக்க மறக்காதீர்கள்.

RTS ஃபுட் ஸ்ட்ரீட்

நாவலூரில் உள்ள RTS ஃபுட் ஸ்ட்ரீட்டில் தான் சென்னையின் பாதி நள்ளிரவு கூட்டத்தை நீங்கள் காணலாம். சுற்றியுள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் காரணமாக இரவு நேரத்திலும் இந்த இடம் பரபரப்பாக இயங்குவதை நாம் காணலாம். 15,000 சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஃபுட் ஸ்ட்ரீட் 70 க்கும் மேற்பட்ட விதவிதமான விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. கிரில்டு சிக்கன், மட்டன், கபாப்கள், ஷவர்மாக்கள், பிரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் ரோல்கள் வரை நீங்கள் எல்லாமுமே இங்கே சுவைக்கலாம்.

 

Related Post