மற்ற தலைவர்கள் மாதிரி இருக்காது.. ”ஃபயரா இருக்கும்” விஜய் சுற்றுப்பயணம் தேதியை சொன்ன தாடி பாலாஜி

post-img
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக காமெடி நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுவரை தலைவர்கள் சென்ற சுற்றுப்பயணத்தை விடவும் விஜய் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் வேற லெவலில் இருக்கும். ஒரு ஃபயராக இருக்கும் என்றும் அவர் கூறினார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சியை அறிமுகம் செய்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறி அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தார். தொடர்ந்து ஆகஸ்டு 22 ஆம் தேதி சென்னை பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் கட்சியின் கொள்கை மற்றும் செயல்திட்டங்களை அறிவித்தார். அப்போது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். அதோடு, 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் விஜய் கூறினார். தொடர்ந்து அவ்வப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு விஜய் கருத்துக்களை கூறி வருகிறார். மறுபுறம் ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார். படத்தின் ஷூட்டிங்க் முடிந்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. கட்சியில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் வட்டம் அளவிலான நிர்வாகிகள் நியமிக்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இதற்கிடையே விஜய் வீட்டில் வைத்தே பெரியார் சிலைக்கு மரியாதை செய்தது, வேலுநாச்சியார் சிலைக்கு மரியாதை செய்தது எல்லாம் விமர்சிக்கப்பட்டது. கட்சியை அறிவித்து விட்டு ஒர்க் பிரம் ஹோம் மாதிரி அரசியல் செய்வதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு விஜய் கட்சி நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். கட்சி அறிமுக, பாடல் அறிமுகம், முதல் மாநாடு, கொள்கை பிரகடனம் என படிப்படியாக அரசியலில் அடுத்தடுத்த மூவ் செய்து வரும் விஜய், இனி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். ஏற்கனவே விஜய் இதை கூறிய நிலையில், எப்போது இருந்து விஜய் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிக தாடி பாலாஜி தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தாடி பாலாஜி கூறுகையில், நடிகர் விஜய் வரும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தாடி பாலாஜி கூறியதாவது:- ஜனவரி 27 முதல் சுற்றுப்பயணம்: எல்லாமே விஜய்யின் முடிவு தான். விஜய் எது சொன்னாலும் பவர் புல்லா இருக்கும். ஒன்னு சொன்னாலே பெரிசா ஆகிடுது. ஜனவரி 27 ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். உள்ளே பேசிக்கொண்டார்கள். தேர்தலை முன்னிட்டு நிறைய தலைவர்கள் சுற்றுப்பயணம் போறார்கள். அதே போல தான் விஜய்யும் சுற்றுப்பயணம் செல்ல போகிறார். இதுவரை தலைவர்கள் சென்ற சுற்றுப்பயணத்தை விடவும் விஜய் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் வேற லெவலில் இருக்கும். ஒரு ஃபயராக இருக்கும். கவலையே பட வேண்டாம். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பாலாஜி இந்த வேலையை பாருங்க என்று எனக்கு அழைப்பு வந்தால், நிச்சயம் செய்வேன். சிறப்பாக செய்வேன். அவர் சந்தோஷப்படுகின்ற அளவுக்கு சிறப்பாக செய்வேன். நிச்சயமாக அழைப்பார் என்று நம்புகிறேன். ஒற்றுமையாக இருந்தால் ஒன்றே ஒன்று தான். நாம் எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் தான் மட்டுமே 2026ல் ஆட்சியை பிடிக்க முடியும். நாம் ஒற்றுமையா இருந்தால் தான் தலைவரை அரியணையில் அமர வைக்க முடியும். நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாரும் ஒன்னா இருக்கனும். ஒரு இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்குது என்றால் அதற்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.. அத சப்போர்ட் பண்ணி அடுத்த லெவலுக்கு கொண்டு போகனும். எல்லாரும் உழைக்கிறதே தளபதி விஜய்க்காக தான். எனவே தளபதி விஜய் வரும் தேர்தலில் வெற்றி பெறுவார். அவர் பின்னாடி நான் நிற்பேன். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post