கட்சி ஆரம்பிச்சு.. 1 வருடம் கூட ஆகலை.. விஜய்க்கு போன 3 மேஜர் வார்னிங்.. பதறியடித்த பனையூர் பங்களா!

post-img
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து இன்னும் 1 வருடம் கூட ஆகவில்லை. கடந்த பிப்ரபவரியில் தொடங்கப்பட்ட இந்த கட்சியில் பல அரசியல் ரீதியான சிக்கல்கள் நிலவி வருகிறதாம். இது தொடர்பாக விஜய்க்கும் முக்கியமான சில தகவல்கள் சென்றுள்ளதாம். கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து சென்ற இந்த தகவல்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம். முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தில் உட்கட்சி பூசல் உள்ளது. மேலே இல்லை என்றாலும் மாவட்ட அளவில் உள்ளூர் அளவில் மோதல் உள்ளது. உள்ளூர் அளவில் இப்போதுதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதை அங்கே இருக்கும்.. பதவி எதிர்பார்த்து காத்திருந்த மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை . இதனால் கொடி ஏற்றுவது தொடங்கி போஸ்டர் அடிப்பது வரை பல மோதல்கள் நடக்கின்றன. ஒரே மாவட்டத்தில் பல விஜய் ரசிகர் குழுக்கள் இருக்கும். மன்றங்கள் ஒன்று என்றாலும் குழுக்களாக இவர்கள் பிரிந்து இருப்பார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையே பதவி பெறுவதில் பூசல் நிலவி வருகிறதாம். முக்கியமாக் போஸ்டர் மற்றும் கொடி ஏற்றுவதில்தான் அதிக அளவில் மோதல் நிலவி வருகிறதாம். பல மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை மற்ற ரசிகர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தனது கட்சி நிர்வாகிகள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம். அதன்படி சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்வாகி ஒருவர்.. விஜயை எதிர்கொள்ள அதிமுக, திமுக இரண்டிற்கும் பயம். அதாவது இவர்கள் 2026ல் கூட்டணி வைப்பார்கள். அதாவது விஜயை எதிர்க்க அதிமுக - திமுக கூட்டணி வைக்கும் என்று கூறினார். சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இன்னொரு நிர்வாகி ஒருவர்... திமுக தனி தொகுதிகளை விசிகவிற்கு வழங்கும். பொது தொகுதியில் விசிக்கவை திமுக நிற்க விட்டதே இல்லை என்று கூறி இருந்தார். அதாவது வரலாறு தெரியாமல்.. விஜய் கட்சி நிர்வாகி பேசி இருந்தார். அது மட்டுமின்றி விவாத நிகழ்ச்சிகளுக்கு வரும் மற்ற கட்சியினர் பொதுவாக அரசியல் ரீதியாக நிறைய படித்திருப்பார்கள். அரசியல் வரலாறுகள் தெரிந்து இருக்கும். தமிழக அளவில் கட்சி தொடர்பான வரலாறுகள் தெரிந்து இருக்கும். ஆனால் விஜய் கட்சியினர் இதற்கு புதிது. இத்தனை காலம் அதில் பலர் ரசிக சண்டை போட்டு வந்தனர். ஆனால் இவர்கள் இப்போது திடீரென அரசியல் பேச தொடங்கி உள்ளனர். ஆனால் அரசியல் சண்டை என்பது சினிமா சண்டை போன்றது அல்ல. இதில் வரலாறு, உண்மையான நம்பர்ஸ், புள்ளி விவரம் முக்கியம். ஆனால் விஜய் ரசிகர்கள் இன்னும் அந்த அளவிற்கு பக்குவப்படவில்லையோ என்று தோன்றுகிறது. இதன் காரணமாகவே விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திணறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம். ஏதாவது உளறுகிறார்களே என்று கோபத்தில் உள்ளாராம். இதனால் கட்சி சார்பாக புதிய செய்தி தொடர்பாளர்களை.. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதிய நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். அனுபவம் பெற்றவர்களை களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். சுற்றுப்பயணம் சிக்கல்: விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தியப் பிறகு கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து எவ்வித ஆக்சனை யும் எடுக்காமல் இருந்து வரும் விஜய், கடந்த வாரம் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதில், மண்டல மாநாடுகளை நடத்துவது என அலசப்பட்டுள்ளது. அதாவது கோவை, சேலம், திருச்சி, நாகை அல்லது திருவாரூர், மதுரை, நெல்லை அல்லது கன்னியாகுமரி ஆகிய மாவட்ட தலை நகரில் மாநாடு நடத்தலாம் என்றும், இறுதியில் சென்னையில் நடத்தலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை அலசிய விஜய், சென்னையைத் தவிர்த்து 6 மாவட்டங்கள் வருகிறது. 6 மாவட்டங்களில் மாநாடு நடத்த வேண்டுமானால் ஒரு மாநாட்டுக்கும் மற்றொரு மாநாட்டுக்கும் குறைந்த பட்சம் 2 மாதங்களாவது இடைவெளி தேவைப்படும். அப்படியானால் கிட்டத்தட்ட 1 வருடம் தேவை. இது சாத்தியமா? மண்டல மாநாட்டிற்கே நேரம் செலவழித்தால் தேர்தல் பணிகள் எப்படி நடக்கும் ? அதற்கு நேரம் தேவைப்படாதா? இதற்கிடையில், என்னை மாவட்ட சுற்றுப்பயணம் வேறு போகச் சொல்கிறீர்கள். இதற்கெல்லாம் நேரம் இருக்குமா? செலவுகளை நம் கட்சியினர் சமாளிப்பார்களா? என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார் விஜய்

Related Post